மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை ‘பூஜ்ஜிய பாபு கிராமின் ரோஸ்கார் யோஜனா’ என்று மாற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை “பூஜ்ஜிய பாபு கிராமின் ரோஸ்கார் யோஜன“ என்று மாற்ற திட்டம். பெயர் மாற்றம் தொடர்பாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மசோத தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெயர் மாற்றத்துடன் மட்டும் அல்லாமல், ஊரக வேலை உறுதி திட்டத்தின் முக்கிய அம்சங்களிலும் மாற்றம் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, தற்போது வழங்கப்பட்டு வரும் 100 நாள் வேலையை 125 நாளாக உயர்த்தும் திட்டமும் மசோதாவில் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இது ஊரக தொழிலாளர்களுக்கு கூடுதல் வேலை வாய்ப்பை உருவாக்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
S.I.R நடவடிக்கையால் தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு – ஆர்.எஸ்.பாரதி


