spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுS.I.R நடவடிக்கையால் தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு - ஆர்.எஸ்.பாரதி

S.I.R நடவடிக்கையால் தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு – ஆர்.எஸ்.பாரதி

-

- Advertisement -

தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம் என திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.S.I.R நடவடிக்கையால் தமிழகத்தில்  85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு - ஆர்.எஸ்.பாரதி மேலும், இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, “தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி மூலம் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம். எஸ்.ஐ.ஆர். பணிகளின் பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் வலுவாக எதிர்த்தது திமுகதான். டிசம்பா் 19-ம் தேதிக்கு பிறகு எஸ்.ஐ.ஆர் பணிகள் குறித்த முழு விவரங்கள் தெரியவரும். தகுதியான வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்க்கும் பணியில் ஈடுபடுவோம்.

வாக்குச்சாவடி மையங்களை அதிகரித்தது எப்படி? அரசியல் கட்சிகளுடன் ஆலோசிக்காமல் வாக்குச்சாவடி எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அமித் ஷா எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வந்தாலும் எந்த மாற்றமும் இருக்காது. நாடாளுமன்றத் தேர்தலுக்காக 8 முறை பிரதமர் மோடி தமிழகம் வந்தும் எதுவும் எடுபடவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலில் 202 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் சூழல் உள்ளது” என்று திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு …8 ஆண்டுகளுக்குக் பின் குற்றவாளிக்ளுக்கு தண்டனை அறிவிப்பு…

we-r-hiring

MUST READ