ஹைதராபாதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மெஸ்ஸியை அவர் தங்கும்அரண்மனைக்கே சென்று சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
”GOAT இந்தியா டூர்” நிகழ்வின் ஒரு பகுதியாக மெஸ்ஸி இன்று ஹைதராபாதில் கால்பந்து நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிப் போட்டியில் பங்கேற்கிறார். அங்கு முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான கால்பந்து அணி, மெஸ்ஸி தலைமையிலான கால்பந்து அணியுடன் நட்பு போட்டியில் விளையாடுகிறது. இந்நிலையில், போட்டியில் நாகுல் காந்தியும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், போட்டிக்கு முன்னதாக ராகுல், மெஸ்ஸியை அவர் தங்கும்அரண்மனைக்கே சென்று சந்தித்து பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து நாளை (டிசம்பர் 14) மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் கிளப்பில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்ளவிருக்கிறார். டிசம்பர் 15ஆம் தேதி தில்லிக்குச் சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து உரையாற்றுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
2026 தேர்தல்… 1.3 லட்சம் ‘கருப்பு சிவப்பு’ சித்தாந்தப் போர்வீரர்களுடன் உதயநிதி சந்திப்பு…


