spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு2026 தேர்தல்… 1.3 லட்சம் 'கருப்பு சிவப்பு' சித்தாந்தப் போர்வீரர்களுடன் உதயநிதி சந்திப்பு…

2026 தேர்தல்… 1.3 லட்சம் ‘கருப்பு சிவப்பு’ சித்தாந்தப் போர்வீரர்களுடன் உதயநிதி சந்திப்பு…

-

- Advertisement -

2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) இளைஞர் அணியை மேலும் பலப்படுத்தும் நோக்கத்துடன், வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு திருவண்ணாமலையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. சுமார் 1.3 இலட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் இதில் பங்கேற்க உள்ளனர்.2026 தேர்தல்… 1.3 லட்சம் 'கருப்பு சிவப்பு' சித்தாந்தப் போர்வீரர்களுடன் உதயநிதி சந்திப்பு…75 ஆண்டுக்கால திமுகவின் அரசியல் பயணத்தில், 1980 ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கப்பட்ட இளைஞர் அணி, கட்சியின் வெற்றிக்குப் பின்புலமாக முக்கியப் பங்கு வகித்து வருகிறது. இன்றைய அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலர் இளைஞர் அணியின் பாசறையில் இருந்து பட்டை தீட்டப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் கொள்கைகளைத் திசையெங்கும் கொண்டு செல்லும் கருத்தியல் பணிகளிலும், கட்சிக்கு வலிமை சேர்க்கும் அரசியல் பணிகளிலும் இளைஞர் அணி தீவிரமாகச் செயல்படுகிறது.

‘திராவிட மாடல் பயிற்சிப் பாசறைக் கூட்டங்கள்’, சட்டமன்றத் தொகுதிதோறும் ‘கலைஞர் நூலகம்’, ‘முரசொலி பாசறைப் பக்கம்’, ‘முத்தமிழறிஞர் பதிப்பகம்’ உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகளை இந்த அணி மேற்கொண்டுள்ளது. 200-க்கும் மேற்பட்ட இளம் பேச்சாளர்கள், ‘கலைஞர் மாணவப் பத்திரிகையாளர் திட்டம்’, அண்மையில் வெளியிடப்பட்ட ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூல் எனத் திராவிடச் சித்தாந்தத்தை மக்களிடம் எடுத்துச் செல்கிறது.

we-r-hiring

குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA) எதிர்ப்பு, நீட் தேர்வை ஒழிக்க வலியுறுத்தி உண்ணாவிரதம், நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கம், இந்தித் திணிப்பு எதிர்ப்பு மற்றும் நிதி ஒதுக்குவதில் ஒன்றிய அரசின் பாரபட்சம் ஆகியவற்றைக் கண்டித்துத் தெருமுனைக்கூட்டங்கள் என்று மக்கள் பிரச்சினைகளுக்காகவும் இளைஞர் அணி தொடர்ந்து களத்தில் நிற்கிறது.

​திமுக இளைஞர் அணி, மாநிலம் முதல் கிளை வரை தமிழ்நாட்டின் அனைத்துத் திசைகளிலும் வேர்விட்டுப் பரவியுள்ளது. வழக்கமான நிர்வாக அமைப்புகளுடன், இந்த ஆண்டு சமூக வலைதளப் பக்கங்களை நிர்வகிக்க மாவட்டந்தோறும் சமூக வலைதளங்களுக்கான துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளது ஒரு புதிய முன்னெடுப்பு.

தற்போது, திமுக தலைவரின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு முழுவதும் 5 லட்சம் இளைஞர் அணி நிர்வாகிகளையும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களையும் கொண்ட வலுவான அணியாக இளைஞர் அணி கட்டமைக்கப்பட்டுள்ளது.

2026 சட்டசபைத் தேர்தலில் இளைஞர் அணியின் பங்களிப்பை திமுகவின் மிகப்பெரிய பலமாக மாற்றும் நோக்கில், நியமிக்கப்பட்ட 5 லட்சம் நிர்வாகிகளையும் ஒருங்கிணைத்து மண்டலம் தோறும் நிர்வாகிகள் சந்திப்பை நடத்தத் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

​இந்த உத்தரவின் முதல் கட்டமாக, திமுக இளைஞர் அணியின் வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு திருவண்ணாமலை கலைஞர் திடலில் நடைபெற உள்ளது.

திமுகவின் 29 மாவட்டங்களுக்குட்பட்ட 91 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த 1 லட்சத்து 30 ஆயிரத்து 329 கிளை-வார்டு-பாக இளைஞர் அணி நிர்வாகிகள் இதில் பங்கேற்கின்றனர். இந்தச் சந்திப்பு நிகழ்விற்காகப் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

150 ஏக்கர் பரப்பளவில் சுமார் 2 லட்சம் பேர் அமரக்கூடிய வசதி தயார் செய்யப்பட்டுள்ளது. நிர்வாகிகள் நிகழ்விடத்திற்கு வந்து செல்ல 2700 பேருந்துகளும், 500 கார் வேன்களும் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பங்கேற்கும் 1.3 லட்சத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்குத் தற்காலிகக் கழிப்பிடங்கள், மருத்துவ வசதிகள், குடிநீர் மற்றும் 10 பொருள்கள் அடங்கிய உணவுத் தொகுப்பும் வழங்கப்பட உள்ளது.

​பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் திட்டமிடப்பட்டுள்ள இந்த நிகழ்வானது, “2026 ஆம் ஆண்டு மீண்டும் திராவிட மாடல் திமுக அரசை உருவாக்குவதுதான் இளைஞர் அணியின் லட்சியம்” என்ற நோக்கில் நடத்தப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

Mess-ஆன மெஸ்ஸியின் இந்தியா சுற்றுப்பயணம் – கொல்கத்தாவில் நடந்த பரபரப்பு

MUST READ