spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஅஜித் பவாரின் மனைவி முதலமைச்சர் ஆவாரா?

அஜித் பவாரின் மனைவி முதலமைச்சர் ஆவாரா?

-

- Advertisement -

அஜித் பவாா் மறைவை அடுத்து அவரது மனைவி சுனேத்ரா பவாரை பாஜக கூட்டணி அரசில் துணை முதல்வராக்க அக்கட்சியினா் வற்புறுத்தி வருகின்றனா்.அஜித் பவாாின் மனைவி முதலமைச்சர் ஆவாரா? மராட்டியத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி அரசில் அஜித் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் அங்கமாக உள்ளது. விமான விபத்தில் உயிரிழந்த அஜித்பவாாின் மனைவி சுனேத்ரா பவாா், தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளாா். சுனேத்ரா பவாரை தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவராக தோ்ந்தெடுக்க அக்கட்சியினா் வற்புறுத்தி வருகின்றனா்.

தேவேந்திர பட்னவிஸ் அரசில் துணை முதல்வா் பதவியை தேசியவாத தாங்கிரஸ் விடுபட்டுவிடக் கூடாது என்பதில் கட்சியினா் உறுதியாக உள்ளனா்.

we-r-hiring

இந்நிலையில், அஜித் பவாாின் மனைவிக்கு பாஜக ஆதரவு தெரிவித்து வருகின்றது. பட்னவிஸ் தலைமையிலான பாஜக கூட்டணி அரசில் துணை முதலமைச்சராக சுனேத்ரா பவாா் பொறுப்பேற்க பாஜக ஆதரவு தெரிவித்து வருகின்றது. சுனேத்ரா பவாரை துணை முதல்வராக்கினால் அஜித் பவாருக்கு செலுத்தும் பொருத்தமான அஞ்சலியாக இருக்கும் என கருத்து தெரிவித்துள்ளது. எனினும் சுனேத்ராவை தோ்ந்தெடுப்பது தேசியவாத காங்கிரஸின் உள்கட்சி விவகாரம் என்றும் பாஜக தலைவா் ராம்கதம் பேட்டியளித்துள்ளாா்.

மேலும், முன்னாள் மராட்டிய முதலமைச்சா் சா்பதம் சிங் பாஜிராவ் பாட்டீஸ் மகளான சுனேத்ரா அரசியலுக்கு புதியவரல்ல என்றும் கருத்து. சுனேத்ரா பவாா் மராட்டிய அமைச்சரவையில் சேர வேண்டும் என்று கட்சி தொண்டா்கள் விரும்புவதாக அமைச்சா் நரஹாி ஜிா்வால் தெரிவித்துள்ளாா்.

மராட்டிய துணைமுதலமைச்சர் அஜித் பவார் கடைசி போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரல்…

MUST READ