Homeசெய்திகள்இந்தியாவணிக சிலிண்டர் தட்டுப்பாடு: மத்திய அரசுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடிதம்

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: மத்திய அரசுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடிதம்

-

- Advertisement -

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: மத்திய அரசுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடிதம்

பெங்களூரு:

we-r-hiring

கர்நாடகாவில், குறிப்பாக பெங்களூருவில் கடந்த சில நாட்களாக வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ள சூழலில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சரின் முக்கிய கோரிக்கைகள்:

​மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் சித்தராமையா குறிப்பிட்டுள்ளதாவது:

“லட்சக்கணக்கான மக்களுக்காக தினமும் இயங்கும் ஹோட்டல்கள், உணவகங்கள், விடுதிகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு கியாஸ் விநியோகம் தடைபட்டுள்ளது. இது சாதாரண மக்கள் மற்றும் மாணவர்களின் அன்றாட உணவைப் பாதிக்கும்.”

போதுமான வணிக சிலிண்டர் விநியோகத்தை உறுதி செய்ய மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வணிக சிலிண்டர் விலை ₹115-ம், வீட்டு உபயோக சிலிண்டர் விலை ₹60-ம் உயர்த்தப்பட்டிருப்பது தேவையற்ற சுமை என அவர் சாடியுள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் (West Asia) நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, இந்தியாவில் வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஹோட்டல் உரிமையாளர்கள் எச்சரிக்கை:

​பெங்களூரு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம், சிலிண்டர் விநியோகம் சீராகவில்லை எனில் மார்ச் 10 முதல் உணவகங்களை மூட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று எச்சரித்துள்ளனர். “எண்ணெய் நிறுவனங்கள் 70 நாட்களுக்குத் தட்டுப்பாடு இருக்காது என்று உறுதியளித்த நிலையில், திடீரென விநியோகம் நிறுத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது” என தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் விளக்கம்:

​தட்டுப்பாடு நிலவினாலும், வணிகப் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்படவில்லை என மத்திய அமைச்சக அதிகாரிகள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளால் களத்தில் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு: ஹோட்டல் உரிமையாளர்களுடன் தமிழக அரசு அவசர ஆலோசனை!

MUST READ