Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்மீண்டும் சிம்மாசனத்தை பிடிக்க வந்த 'SUV கிங்' - புதிய ரெனால்ட் டஸ்டர் விற்பனைக்கு அறிமுகம்!

மீண்டும் சிம்மாசனத்தை பிடிக்க வந்த ‘SUV கிங்’ – புதிய ரெனால்ட் டஸ்டர் விற்பனைக்கு அறிமுகம்!

-

- Advertisement -

நீண்ட எதிர்பார்ப்புகளுக்குப் பின் புதிய பொலிவுடன் மீண்டும் சிம்மாசனத்தை பிடிக்க வந்துள்ள ‘SUV கிங்’-ன் புதிய ரெனால்ட் டஸ்டர் காரை அறிமுகம் செய்துள்ளது ரெனால்ட் இந்தியா நிறுவனம். மீண்டும் சிம்மாசனத்தை பிடிக்க வந்த 'SUV கிங்' - புதிய ரெனால்ட் டஸ்டர் விற்பனைக்கு அறிமுகம்!

இந்திய எஸ்யூவி (SUV) சந்தையில் ஒரு காலத்தில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த ரெனால்ட் டஸ்டர், தற்போது முற்றிலும் புதிய பொலிவுடன் மீண்டும் களமிறங்கியுள்ளது. நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு, 2026 மாடல் ரெனால்ட் டஸ்டர் காரின் விலை விவரங்களை அந்நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.

we-r-hiring

விலை விவரங்கள் (Ex-showroom):
புதிய டஸ்டர் மிகக் கடுமையான போட்டி நிலவும் மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் களமிறங்குவதால், இதன் விலை மிகவும் சவாலான முறையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடக்க விலை: ₹10.49 லட்சம்
உயர்ந்தபட்ச விலை: ₹18.49 லட்சம்

முன்பதிவு சலுகை: ஏற்கனவே ‘R-Pass’ மூலம் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பு விலையாக ₹10.29 லட்சம் முதல் கிடைக்கிறது.

மீண்டும் சிம்மாசனத்தை பிடிக்க வந்த 'SUV கிங்' - புதிய ரெனால்ட் டஸ்டர் விற்பனைக்கு அறிமுகம்!

முக்கிய சிறப்பம்சங்கள்:
புதிய டஸ்டர் முந்தைய மாடலை விட அதிக தொழில்நுட்ப வசதிகளுடனும், நவீன வடிவமைப்பிலும் உருவாக்கப்பட்டுள்ளது. நவீன Y-வடிவ LED விளக்குகள், முரட்டுத்தனமான கிரில் மற்றும் 18-இன்ச் அலாய் வீல்கள் காரின் தோற்றத்தை கம்பீரமாக்குகின்றன. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 212mm ஆகும்.

10.1-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளது. பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் Level 2 ADAS தொழில்நுட்பம், 6 ஏர்பேக்குகள், 360-டிகிரி கேமரா மற்றும் நான்கு சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் 1.0 லிட்டர் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. இதன் ஹைபிரிட் (Hybrid) மாடல் இந்த ஆண்டின் இறுதியில் (தீபாவளி சமயத்தில்) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெலிவரி விவரம்:
இந்தக் காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. வாடிக்கையாளர்களுக்கான டெலிவரி வரும் ஏப்ரல் 2026 முதல் தொடங்கும் என ரெனால்ட் இந்தியா அறிவித்துள்ளது.

ஆராய்ச்சி உலகில் புதிய புரட்சி – நிமிடங்களில் ‘Research Diagram’-களை உருவாக்கும் புதிய AI கருவி அறிமுகம்!

MUST READ