காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 3,000 கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு, காவிரி மேலாண்மை ஆணையத்திற்குப் பரிந்துரை செய்துள்ளது.


டெல்லியில் நடைபெற்ற கூட்டம்
காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டம் அதன் தலைவர் வினித் குப்தா தலைமையில் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதன் முடிவில், தமிழகத்திற்குத் தொடர்ந்து 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு காவிரி மேலாண்மை ஆணையத்திற்குப் பரிந்துரை செய்யப்பட்டது.
இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் அடுத்தகட்ட முடிவை எடுக்க உள்ளது. கர்நாடகத்திற்கு நீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்படுமா என்பது ஆணையத்தின் முடிவுக்குப் பிறகே தெரியவரும்.
ஞானேஷ் குமாரை பதவி நீக்க வலியுறுத்தி நவம்பர் 7-ல் கொச்சியில் CJP போராட்டம்!
