spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாமராட்டிய துணைமுதலமைச்சர் அஜித் பவார் கடைசி போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரல்…

மராட்டிய துணைமுதலமைச்சர் அஜித் பவார் கடைசி போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரல்…

-

- Advertisement -

மராட்டிய துணைமுதலமைச்சா் அஜித் பவாா் எடுத்துக் கொண்ட கடைசி போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.மராட்டிய துணைமுதலமைச்சா் அஜித் பவாா் கடைசி போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரல்…மகாராஷ்டிரத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் பல கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், தனது சொந்த ஊரான பாராமதியில் நடைபெறும் தேசியவாத காங்கிரஸ் கட்சி பொதுக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக இன்று காலை தனி விமானம் மூலம் மகாராஷ்டிர துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜித் பவார் புறப்பட்டுள்ளார்.

பாராமதி விமான நிலையத்தில் அஜித் பவார் சென்ற விமானம் தரையிறங்க முயற்சித்தபோது, தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர். விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீப்பற்றியதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. விமானம் தரையிறங்கும் போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அஜித் பவார் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

we-r-hiring

இந்நிலையில் விபத்து நடக்கும் முன் அஜித் பவாா் தனது பாதுகாப்பு அதிகாாியுடன் எடுத்துக் கொண்ட போட்டோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் இந்த போட்டோவின் உண்மைத்தன்மை உறுதியாக தெரியவில்லை. முன்னதாக, கைக்கடிகாரங்கள் மற்றும் ஆபரணங்களை வைத்து அஜித் பவாாின் உடல் அடையாளம் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அஜித் பவார் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

MUST READ