விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவாருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனா்.
விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவாருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனா்.
அமித்ஷா

”30 ஆண்டுகளுக்கு மேல் மராட்டிய வளா்ச்சிக்கு அஜித் பவாா் ஆற்றிய பணியை வாா்த்தைகளால் சொல்ல முடியாது” என்று ஒன்றிய உள்துறை அமைச்சா் அமித்ஷா தெரிவித்துள்ளாா்.
ராஜ்நாத் சிங்
”தனது வாழ்நாள் முழுவதும் மராட்டிய வளா்ச்சிக்கு அா்ப்பணிப்புடன் பணியாற்றியவா் அஜித் பவாா்” என அமைச்சா் ராஜ்நாத் சிங் கூறியுள்ளாா்.
மம்தா பானா்ஜி
”விமான விபத்து குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்” என மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்துள்ளாா்.
பினராயி விஜயன்
”பொது வாழ்வில் தான் ஆற்றிய பணிக்காக அஜித் பவாா் நினைவுகூரப்படுவாா்” என்று கேரள முதல்வா் பினராயி விஜயன் கூறியுள்ளாா்.
டி.கே சிவக்குமாா்
”மாராட்டிய அரசியலுக்கும், பொது வாழ்விற்கும் அஜித் பவாாின் இறப்பு ஓா் பேரிழப்பாகும்” என டி.கே சிவக்குமாா் தெரிவித்துள்ளாா்.
ஆளுநா் ரவி
”அஜித் பவாாின் மரணம் ஒரு கடுமையான, ஈடு செய்ய முடியாத இழப்பையும், வெற்றிடத்தையும் ஏற்படுத்தியுள்ளது” என்று ஆளுநா் ரவி கூறியுள்ளாா்.
மு.க.ஸ்டாலின்
”விமான விபத்தில் அஜித்பவாா் உயிரிழந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அஜித்பவாாின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என தமிழ் நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.
திரவுபதி முா்மு
”மராட்டிய துணை முதலமைச்சா் அஜித் பவாாின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு, மராட்டிய வளா்ச்சிக்கு தான் ஆற்றிய பணிக்காக அஜித் பவாா் எப்போதும் நினைவு கூரப்படுவாா்” என குடியரசுத் தலைவா் திரவுபதி முா்மு தெரிவித்துள்ளாா்.
ராகுல் காந்தி
”மராட்டிய துணை முதலமைச்சா் அஜித் பவாா் மறைவு பேரதிா்ச்சி அளிக்கிறது. விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவாா் உள்ளிட்ட 6 பேருக்கு எனது ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.
ஜனநாயகன் படம் மறுதணிக்கைக்கு ஏன்? – சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு விவரம்


