மராட்டிய மாநில துணை முதலமைச்சர் அஜித் பவாரின் இறுதிச் சடங்கு வித்யா பிரதிஷ்டான் மைதானத்தில் நடைபெறுகிறது.
இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக அவரது குடும்ப உறுப்பினர்கள், சுனேத்ரா பவார் (மனைவி, ராஜ்யசபா எம்பி), அவரது மகன்கள் பார்த் பவார், ஜெய் பவார், அவரது மாமாவும், NCP-SP தலைவருமான ஷரத் பவார், சுப்ரியா சுலே NCP-SP எம்பி, ரோஹித் பவார், யுகேந்திர பவார் போன்ற பவார் குடும்ப உறுப்பினர்கள், உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேவேந்திர பட்னவிஸ் (முதலமைச்சர்), துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, நிதின் நபீன் (BJP தேசிய தலைவர்), முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல் படேல், சாகன் புஜ்பால் (மாநில அமைச்சர்), பாபாசாகேப் பாட்டீல், நீலம் கோர்ஹே, சுஷில் குமார் ஷிண்டே (மூத்த காங்கிரஸ் தலைவர்), உத்தவ் தாக்கரே (சிவ சேனா UBT தலைவர்) கலந்துக் கொண்டனா்.
இதுதவிர, NCP, BJP, Shiv Sena உள்ளிட்ட பல கட்சிகளின் மூத்த தலைவர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்கள், உள்ளூர் மக்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொள்கின்றனர்.

