விமான விபத்தில் உயிரிழந்த மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
மக்கள் தலைவராக விளங்கிய அஜித் பவார், சமூகத்தின் அடிமட்டம் வரை மக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். கடின உழைப்பாளியாகவும், மக்களுக்கு சேவை செய்வதையே தனது முதன்மை கடமையாகக் கொண்டவராகவும் அவர் திகழ்ந்ததாக தெரிவித்துள்ளார்.

விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றம் குறித்தும், அரசின் நிர்வாகம் குறித்தும் அஜித் பவாருக்கு ஆழ்ந்த புரிதல் இருந்தது குறிப்பிடத்தக்கது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அஜித் பவாரின் எதிர்பாராத மறைவு அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அளிப்பதாகக் கூறிய பிரதமர், அவரை இழந்து துயரில் ஆழ்ந்த குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும் தனது ஆறுதலை தெரிவித்துள்ளார்.
மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவார் விமான விபத்தில் மரணம்!!
