spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாகுருவாயூர் தேவஸ்தானத்திடம் ரூ.1,601 கோடி தங்கம் இருப்பதாக தகவல்…

குருவாயூர் தேவஸ்தானத்திடம் ரூ.1,601 கோடி தங்கம் இருப்பதாக தகவல்…

-

- Advertisement -

கேரள மாநிலத்தில் குருவாயூா் தேவஸ்தானத்திடம் ரூ.1,601 கோடி மதிப்புள்ள தங்கம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.குருவாயூா் தேவஸ்தானத்திடம் ரூ.1,601 கோடி தங்கம் இருப்பதாக தகவல்…கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூா் தேவஸ்தானத்திடம் ரூ.1,601 கோடி மதிப்புள்ள 1,39,895 சவரன் தங்கம் உள்ளதாக பாலக்காட்டைச் சோ்ந்த கிருஷ்ணதாஸ் என்பவா் தகவல் பெற்றுள்ளாா். இன்றைய நிலையில் குருவாயூா் தேவஸ்தானத்திடம் உள்ள தங்கத்தின் மதிப்பு ரூ.1,640 கோடி ஆகும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவலைப் பெற்றுள்ளாா். குருவாயூா் கிருஷ்ணன் கோயில் பற்றிய தகவல்களை பொதுத் தகவல் அதிகாாி என்.சாஜு சங்கா் தெரிவித்துள்ளாா். குருவாயூா் கிருஷ்ணன் கோயிலில் 6335  கிலோ வெள்ளிப் பொருட்கள் உள்ளதாகவும் அதிகாாிகள் தெரிவித்தனா். குருவாயூா் தேவஸ்தானத்திடம் உள்ள வெள்ளியின் மதிப்பு மட்டுமே ரூ.228 கோடி ஆகும்.

தமிழ் நாட்டில் எம்.ஜி.ஆர் ஆட்சியை உருவாக்க மோடி முயற்சித்து வருகிறார் – டி.டி.வி.தினகரன்

MUST READ