விஜய் பொதுக்கூட்டம் காரணமாக நாளை உப்பளம் சாலையில் போக்குவரத்துக்கு தடை விடுக்கப்பட்டுள்ளது. 
புதுச்சேரி உப்பளம் புதிய துறைமுகம் மைதானத்தில் நாளை நடைபெறும் தவெக தலைவர் விஜயின் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு, அந்தப் பகுதியில் விரிவான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்திற்கான அனுமதியை புதுச்சேரி காவல்துறை வழங்கியுள்ளது.

பொதுக்கூட்டத்தால் எதிர்பார்க்கப்படும் பெரும் திரளை கருத்தில் கொண்டு, உப்பளம் சாலையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைத்து வாகனங்களுக்கும் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் உப்பளம் சாலையில் சாதாரண பொதுமக்கள், வாகனங்கள் ஆகியவற்றின் நடமாட்டம் முற்றிலும் நிறுத்தப்படும் என கிழக்கு பகுதி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.
பொதுக்கூட்டத்திற்காக வரும் வாகனங்களுக்கான மாற்று வழிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், கூட்டத்தில் பங்கேற்கும் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களின் வாகனங்களை முன்பே நிறுத்தி, நடைபயணமாகவே உப்பளம் துறைமுக மைதானத்திற்குள் செல்ல வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
உயர்கல்வியில் மூன்றாம் மொழி திணிப்பை ஏற்க முடியாது – வேல்முருகன்


