Homeசெய்திகள்இந்தியா"மாணவர் போராட்டத்தில் ஏ.கே.47 துப்பாக்கியால் சுடப்பட்டது உண்மை!" – உச்சநீதிமன்றத்தில் பீகார் அரசு அதிர்ச்சி அறிக்கை!

“மாணவர் போராட்டத்தில் ஏ.கே.47 துப்பாக்கியால் சுடப்பட்டது உண்மை!” – உச்சநீதிமன்றத்தில் பீகார் அரசு அதிர்ச்சி அறிக்கை!

-

- Advertisement -

பீகாரில் நடைபெற்ற மாணவர் போராட்டங்களின் போது ஏ.கே.47 துப்பாக்கியால் வானத்தை நோக்கி 4 முறை சுடப்பட்டதாக அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் ஒப்புக்கொண்டுள்ளது."மாணவர் போராட்டத்தில் ஏ.கே.47 துப்பாக்கியால் சுடப்பட்டது உண்மை!" – உச்சநீதிமன்றத்தில் பீகார் அரசு அதிர்ச்சி அறிக்கை!

பீகார் அரசின் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விவரங்கள்:
ஏ.கே.47 துப்பாக்கிச் சூடு:
சிவான் பகுதியில் போராட்டக் கூட்டத்திற்குள் காவலர் ஒருவர் சிக்கிக்கொண்டதால், தற்காப்பிற்காகத் தனது ஏ.கே.47 துப்பாக்கியால் வானத்தை நோக்கி 4 முறை சுட்டதாக அரசு தெரிவித்துள்ளது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

we-r-hiring

ஏ.கே.47 என்பது சட்டம்-ஒழுங்கு பராமரிப்புக்கான ஆயுதம் அல்ல; சிறப்பு நடவடிக்கைகளுக்கானது என்பதால், அத்துமீறிச் சுட்ட அந்தப் போலீஸ்காரர் சஸ்பெண்ட் (பணியிடைநீக்கம்) செய்யப்பட்டுள்ளார்.

9 எம்.எம். துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் காயம்:
ஹாத்தி சவுக் பகுதியில் கூட்டத்தைக் கலைக்கக் காவல் உதவி ஆய்வாளர் 9 எம்.எம். துப்பாக்கியால் 2 முறை சுட்டதில் 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

காவல்துறையினர் மீது தாக்குதல்:
போராட்டத்தில் ஊடுருவிய சமூக விரோதிகள் நடத்திய வன்முறையில் சாப்ரா பகுதியில் 2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள், 3 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 18 காவலர்கள் படுகாயமடைந்தனர். இதில் காவல் அதிகாரி ஒருவர் தனது கண் பார்வையை இழந்துள்ளார்.

கைது மற்றும் ஜாமீன் விவரங்கள்:
கடந்த ஜூலை 22 முதல் 25 வரை பீகாரில் 69 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 500 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் குற்றப்பின்னணி இல்லாத 222 மாணவர்கள் உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறையினர் அதிகப்படியான பலத்தைப் பயன்படுத்தவில்லை என பீகார் அரசு வாதிட்டபோதிலும், மாணவர் போராட்டத்தில் ஏ.கே.47 ஆயுதம் பயன்படுத்தப்பட்டது தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூக்குத் தண்டனை நிறைவேற்றும் முறையை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி: மாற்று வழிகளை ஆராய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி!

MUST READ