கடந்த மாதம் நாடு முழுவதும் நடந்த தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரப் போராட்டத்தின் போது மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை (FIR) ரத்து செய்ய உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
அரசியலமைப்பு உரிமை என உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டு:
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வழக்கை விசாரித்தது. அப்போது பேசுகையில்:

“அமைதியான முறையில் தங்களது கோரிக்கைகளை முன்வைப்பது அரசியலமைப்புச் சட்டத்தின் 19-வது பிரிவின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையாகும். மாணவர்களின் எதிர்காலம் தொடர்பான கேள்வி என்பதால், அவர்களுக்கு அமைப்பின் மீது நியாயமான எதிர்பார்ப்பு உள்ளது. வழக்குகளை ரத்து செய்ய மாணவர்கள் மன்னிப்பு கடிதம் தர வேண்டிய அவசியமில்லை.”
மத்திய அரசின் நிலைப்பாடு:
மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மாணவர் போராட்டங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்கமான வழக்குகளை ரத்து செய்வதில் ஆட்சேபனை இல்லை எனத் தெரிவித்தார். அதேவேளையில், கொலை, பாலியல் வன்கொடுமை, கடத்தல் போன்ற கடுமையான குற்றப்பின்னணி கொண்ட 2,873 பேருக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய முடியாது என்றும், போராட்டத்தில் ஊடுருவிய சமூக விரோதிகள் மீது தனியாக விசாரணை நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.
முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் உயர்மட்டக் குழு:
போராட்டத்தின் போது டெல்லி, பீகார் உள்ளிட்ட மாநிலப் காவல்துறையினர் அளவுக்கு அதிகமான வன்முறையைப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்க உச்சநீதிமன்றம் திட்டமிட்டுள்ளது. இக்குழுவில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் முன்னாள் டி.ஜி.பி. ஒருவரும் இடம்பெறவுள்ளனர்.
டிஜிட்டல் ஆதாரங்களைப் பாதுகாக்க உத்தரவு:
பெண் போராட்டக்காரர்களுக்கு இணையவழி பாலியல் மிரட்டல்கள் விடுக்கப்பட்டது மற்றும் சமூக வலைதளக் கணக்குகள் முடக்கப்பட்ட விவகாரங்களையும் இந்த உயர்மட்டக் குழு ஆய்வு செய்யும். மேலும், போராட்டங்களின் போது எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள், ட்ரோன் வீடியோக்கள், காவல்துறையினரின் பாடி கேமரா பதிவுகள் மற்றும் வயர்லெஸ் உரையாடல்களைப் பத்திரமாகப் பாதுகாக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘திமாகி நக்சல்’ விவாதம்: பிரதமர் மோடியின் சொல்லால் ஏன் கொதிக்கிறது காங்கிரஸ்?
