தேனி மாவட்டம் மேகமலை புலிகள் சரணாலயப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மீண்டும் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது. 
ரிசர்வ் வனப்பகுதியில் பட்டா வழங்கத் தடை:
மேகமலை வனப்பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் பிறப்பித்த முக்கிய உத்தரவுகள்:

இலவம் பஞ்சு தோட்டங்கள் அப்புறடிப்பு:
மேகமலை புலிகள் சரணாலயப் பகுதிகளில் விதிகளை மீறி ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இலவம் பஞ்சுத் தோட்டம் உள்ளிட்ட அனைத்து வகையான ஆக்கிரமிப்புகளையும் முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும்.
பட்டா வழங்கக் கூடாது: ரிசர்வ் வனப்பகுதியாக (Reserve Forest) அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் எந்தவொரு தனியார் நபருக்கும் புதிய பட்டாக்களை வழங்கக் கூடாது.
அடிப்படை வசதிகள் துண்டிப்பு & துணை ராணுவப் படை எச்சரிக்கை:
ஆக்கிரமிப்பாளர்களை உடனடியாக வெளியேற்றும் வகையில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது:
மின், நீர் இணைப்பு துண்டிப்பு:
வனப்பகுதிக்குள் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் வணிக ரீதியிலான இடங்களுக்கான மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகளை உடனடியாகத் துண்டிக்க வேண்டும்.
துணை ராணுவப் படை பாதுகாப்பு:
ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியின் போது தேவைப்பட்டால், போதிய பாதுகாப்பு அளிப்பதற்காகத் துணை ராணுவப்படையை (Paramilitary Forces) அனுப்பி வைக்கத் தயங்க மாட்டோம் என்றும் உச்ச நீதிமன்ற அமர்வு எச்சரித்துள்ளது.
சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகளின் புகலிடமான மேகமலையின் இயற்கை வளத்தைப் பாதுகாக்க இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
