கடந்த 2026 மார்ச் முதல் ஜூலை வரையிலான ஐந்து மாத காலத்தில் மட்டும், சுமார் 1.95 லட்சம் சமூக ஊடகப் பதிவுகளை நீக்க ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சராசரியாக 68 வினாடிகளுக்கு ஒரு பதிவு
மெட்டா (ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்), யூடியூப் உள்ளிட்ட முன்னணி சமூக ஊடக நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு வழங்கிய தடுப்பு உத்தரவுகளின்படி (Blocking Orders), சராசரியாக 68 வினாடிகளுக்கு ஒரு பதிவு என்ற வீதத்தில் நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தினசரி அடிப்படையில் கணக்கிட்டால், நாளொன்றுக்கு சராசரியாக 1,275 சமூக ஊடகப் பதிவுகள் முடக்கப்பட்டுள்ளன.

டெல்லி மாணவர்கள் போராட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிகைகளா?
டெல்லியில் ஜந்தர் மந்தர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்ற தீவிர மாணவர் போராட்டத்தின் போது, இந்த நடவடிக்கைகளின் எண்ணிக்கை உச்சமடைந்துள்ளது. சமூக ஊடகங்கள் மூலம் போராட்டங்கள் தீவிரமடைவதைத் தடுக்கும் நோக்கில், இதுவரை இல்லாத அளவிலான பதிவுகளை நீக்குமாறு உள்துறை அமைச்சகத்தின் இணைய பாதுகாப்பு மையம் மூலமாகவும், தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளின் கீழ் உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. முந்தைய காலங்களை விட இந்த ஐந்து மாத காலத்தில் சோஷியல் மீடியா பதிவுகள் முடக்கம் பல மடங்கு அதிகரித்துள்ளது, கருத்துச் சுதந்திரம் தொடர்பான புதிய விவாதத்தை எழுப்பியுள்ளது.
‘திமாகி நக்சல்’ விவாதம்: பிரதமர் மோடியின் சொல்லால் ஏன் கொதிக்கிறது காங்கிரஸ்?
