சென்னையிலிருந்து இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்கள் 4 மணி நேரம் முதல்7 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் இருந்து இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்கள் 4 மணி நேரம் முதல் 7 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்படும். துபாய், சிங்கப்பூர், மும்பை, டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் பல மணி நேரம் தாமதமானது. நிர்வாக காரணத்தால் தாமதம் என்று அறிவித்தாலும் விமானிகள், பொறியாளர் இல்லாததால் விமானங்கள் தாமதம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், டெல்லியில் விமானம் புறப்படும் நேரத்தை விமான நிறுவனங்களிடம் பயணிகள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று டெல்லியில் கடும் பனி மூட்டம் நிலவுவதால், இந்திரா காந்தி விமான நிலைய நிர்வாகம் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. கடும் பனி மூட்டம் மற்றும் காற்று மாசு காரணமாக டெல்லியில் நேற்று 200 விமானம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. டெல்லி ஆக்ரா விரைவு சாலையில் கடும் பனிமூட்டம் காரணமாக பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி தீப்பிடித்தன. டெல்லி ஆக்ரா விரைவு சாலையில் பேருந்துகளில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனா். 150 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனா். டெல்லி அகர சாலையில் சென்ற ஏழு பேருந்துகள், மூன்று கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த தீ விபத்தில் சிக்கிய பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டு, 20 ஆம்புலன்ஸ்களில் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
100 நாள் வேலை திட்டம் …புதிய மசோதாவால் தமிழ்நாடு அரசுக்கு நிதிச்சுமை



