spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாவரலாறு காணாத வீழ்ச்சி…ரூபாய் மதிப்பு ரூ.91.27 வரை சரிவு...

வரலாறு காணாத வீழ்ச்சி…ரூபாய் மதிப்பு ரூ.91.27 வரை சரிவு…

-

- Advertisement -

அமரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.வரலாறு காணாத வீழ்ச்சி…ரூபாய் மதிப்பு ரூ.91.27 வரை சரிவு...

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்து வருவதால், இந்திய பொருளாதாரத்தில் பெரும் கவலை எழுந்துள்ளது. சமீப காலமாக நீடித்து வரும் இந்த வீழ்ச்சி, இன்று வர்த்தக நேரத்தின் போது வரலாறு காணாத அளவில் அதிகரித்து, டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு ரூ.91.27 வரை சரிந்தது.

we-r-hiring

இந்த நாளில் மட்டும் ரூபாய் மதிப்பு அரை சதவீதம் வரை வீழ்ச்சியடைந்து, ரூ.91-ஐ கடந்த நிலையில் வர்த்தகமாகியது. அமெரிக்கா – இந்தியா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் நீடிக்கும் இழுப்பறி, சர்வதேச சந்தைகளில் அதிகரித்துள்ள ஹெட்ஜிங் நடவடிக்கைகள், மேலும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FII) இந்திய பங்குச் சந்தையிலிருந்து முதலீடுகளை திரும்பப் பெறுவது ஆகியவை இந்த கடும் சரிவுக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, இந்திய பொருளாதாரத்திலும் சந்தைகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, கச்சா எண்ணெய் உள்ளிட்ட இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளதாகவும், அதனால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், ரூபாய் மதிப்பை நிலைநிறுத்தவும், சந்தை அதிர்வுகளை கட்டுப்படுத்தவும், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முக்கியமான தலையீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மத்திய அமைப்புகளை தவறாகப் பயன்படுத்தும் பாஜக… மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்திய நீதித்துறை – முதல்வர்

MUST READ