spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஜி20 மாநாடு குறித்து விரிவாகப் பார்ப்போம்!

ஜி20 மாநாடு குறித்து விரிவாகப் பார்ப்போம்!

-

- Advertisement -

 

ஜி20 மாநாடு குறித்து விரிவாகப் பார்ப்போம்!
File Photo

ஜி20 நாடுகளின் மாநாடு தலைநகர் டெல்லியில் வரும் செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

we-r-hiring

“சந்திரயான்-3 மிகப்பெரிய வெற்றியாகும்”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, அர்ஜெண்டினா, பிரேசில், கனடா, பிரான்ஸ், இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, சவூதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய 19 நாடுகளைக் கொண்ட குழுவிற்கு தான் ஜி20 நாடுகள் என்று பெயர்.

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடு, இந்த மாநாட்டை நடத்துவதற்கான தலைமை தாங்கும். அந்த வகையில், இந்தாண்டு தலைமைப் பொறுப்பு இந்தியாவிற்கு வந்துள்ளது. இந்த மாநாடு தலைநகர் டெல்லியில், செப்டம்பர் 09, 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

இந்த முறை உறுப்பு நாடுகளைத் தவிர வங்கதேசம், எகிப்து, மொரீஷியஸ், நெதர்லாந்து, நைஜீரியா, ஓமன், சிங்கப்பூர், ஸ்பெயின், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 10 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஆசிய வளர்ச்சி வங்கி, பேரிடர் உட்கட்டமைப்பிற்கான சர்வதேச கூட்டணி, சர்வதேச நாணய நிதியம் உட்பட 10 சர்வதேச அமைப்புகளும் அழைக்கப்பட்டுள்ளனர். இந்தாண்டு ஒரு உலகம், ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம் என்ற தலைப்பில் மாநாடு நடத்தப்படுகிறது.

சில மாதங்களில் தேர்தல்- மத்திய பிரதேசத்தில் அமைச்சரவை விரிவாக்கம்!

இரண்டு நாட்கள் நடைபெறும் உச்சி மாநாட்டில் பசுமை வளர்ச்சி, காலநிலை மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல், நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள், பெண்கள் தலைமையின் கீழ் வளர்ச்சியை மேம்படுத்துவது, 21- ம் நூற்றாண்டுக்கு ஏற்றபடி, சீர்திருத்தங்களை மேற்கொள்வது, தொழில்நுட்ப மாற்றங்களை வழிநடத்துவது உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் விவாதங்கள் நடைபெறவுள்ளது.

ஜி20 மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தலைநகர் டெல்லியில் மும்முரமாக நடைபெற்று வருகின்றனர்.

MUST READ