spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா13 ஆண்டுகளாக சொந்த விமானத்தையே மறந்த ஏர் இந்தியா நிறுவனம்…

13 ஆண்டுகளாக சொந்த விமானத்தையே மறந்த ஏர் இந்தியா நிறுவனம்…

-

- Advertisement -

பல ஆண்டுகள் அனுபவ பெற்ற ஏர் இந்தியா நிறுவனம் 13 ஆண்டுகளாக ஓர் விமானத்தை மறந்துவிட்ட வினோதம் நிகழ்ந்துள்ளது. மீட்கப்பட்ட அந்த விமானம் 1900 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கொள்ளும் புதிய பயணம் தொடங்கியது.13 ஆண்டுகளாக சொந்த விமானத்தையே மறந்த ஏர் இந்தியா நிறுவனம்…பிஎஸ்எஸ் போயிங் விமானம் கடந்த 1982 ஆம் ஆண்டு சேவையை தொடங்கியது. பின்னர் பல மாற்றங்களுக்கு பிறகு 2007-ல் ஏர் இந்தியா வசமானது. அதன்பிறகு இந்திய அஞ்சல் துறைக்கு சரக்கு விமானமாக பயன்படுத்தப்பட்ட அந்த விமானம் 2012 ஆம் ஆண்டு சேவையில் இருந்து நிறுத்தப்பட்டது. அப்போது நிறுத்தப்பட்ட அந்த விமானத்தை ஏர் இந்தியா நிறுவன அதிகாரிகள் மறந்துவிட்டதால், 13 ஆண்டுகளாக கேட்பாறின்றி ஒரே இடத்தில் நின்றது.

இந்த நிலையில், பழைய விமானங்களை அப்புறப்படுத்த கொல்கத்தா விமான நிலைய நிர்வாகம் உத்தரவிட்ட பிறகே ஏர் இந்தியா நிர்வாகத்திற்கு தமக்கு சொந்தமான விமான குறித்த தகவல் தெரிய வந்தது. மிகவும் செயலிழந்த நிலையில், மீட்கப்பட்ட போயிங் 737-200 ரக விமானம் 1,900 கிலோ மீட்டர் தூரம் தமது அடுத்த பயணத்தை தொடங்கியுள்ளது. அதாவது பெங்களூருவில் பராமரிப்பு பொறியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக இந்த விமானம் பயன்படுத்தப்பட உள்ளது. இதற்காக டிராக்டர் டிரெய்லர் மூலம் பெங்களூரு விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

we-r-hiring

மீட்கப்பட்ட போயிங் விமானம் செயலிழந்து மீண்டும் பறக்கவே முடியாது என்றாலும், விமானத்தின் பிராட், விட்னி எஞ்சின்கள் நல்ல நிலையில் விற்கப்பட்டுள்ளன. சேவையை நிறுத்திய விமானத்தில் இருந்து எஞ்சின் விற்பனை செய்யப்பட்டது இதுவே முதல் முறை. ஏர் இந்தியா நிறுவனம் தனியார் மயப்படுத்தலின் போது விமானங்களுக்கான பதிவில் இந்த விமானம் பற்றிய தகவல்கள் கொடுக்கவில்லை என்று அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கேம்பல் வேல்சன் தெரிவித்துள்ளார்.

மேலும் 13 ஆண்டுகளாக விமானத்தை நிறுத்தி வைத்ததற்காக ஏர் இந்திய நிறுவனத்திடம் இருந்து ரூ.1 கோடி கட்டணத்தை கொல்கத்தா விமான நிலைய நிர்வாகம் வசூலித்துள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார்

 

MUST READ