அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பனையூர் அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தாா்.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று பேசிய செங்கோட்டையனை கட்சியில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நீக்கினார். இதன் காரணமாக நேற்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின் பனையூர் தவெக அலுவலகத்தில் விஜயை சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பனையூர் அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தாா். செங்கோடையனின் ஆதரவாளர் சத்தியபாமா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் தவெகவில் இணைந்தனர். செங்கோட்டையனுக்கு நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்படலாம் எனவும், 4 மாவட்டங்களில் அமைப்புச் செயலாளர் பதவி வழங்குவதற்கான பேச்சுவார்ததைகள் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், புஸ்ஸி ஆனந்துடன் செங்கோட்டையன் இணைந்து செயல்படுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
வருகின்ற தேர்தலில் 200 தொகுதிகளிலும் வென்று வரலாறு படைப்போம் – துணை முதல்வர் உதயநிதி


