spot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கும் கூட்டணி  பேரம்…திமுகவா, தவெகவா – காங்கிரஸின் அடுத்த கட்ட நகர்வு என்ன?

நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கும் கூட்டணி  பேரம்…திமுகவா, தவெகவா – காங்கிரஸின் அடுத்த கட்ட நகர்வு என்ன?

-

- Advertisement -

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி அரசியலில் புதிய திருப்பங்கள் உருவாகி வருகின்றன. குறிப்பாக ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியும், மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுகவும் இடையிலான அதிகாரப் பகிர்வு விவகாரம் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கும் கூட்டணி  பேரம்…திமுகவா, தவெகவா – காங்கிரஸின் அடுத்த கட்ட நகர்வு என்ன?தமிழக சட்டமன்றத் தேர்தல் ஜுரம் தற்போதே உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அறிவாலயத்திற்கும் சத்தியமூர்த்தி பவனிற்கும் இடையிலான ‘உறவு’ இப்போது நூலில்தான் தொங்கிக் கொண்டிருக்கிறது. “இனியும் பணிந்து போக முடியாது” என்கிற முடிவுக்கு வந்திருக்கிறது டெல்லி மேலிடம்.

அதிகாரப் பகிர்வு கோரிக்கையில் காங்கிரஸ் உறுதி
அடுத்த இரண்டு மாதங்களில் தேர்தல் வரவுள்ள நிலையில், காங்கிரஸின் கோரிக்கை மிகத் தெளிவானது: ‘ஆட்சி அதிகாரம்… அமைச்சரவையில் பங்கு’. கடந்த தேர்தல்களைப் போல் வெறும் ‘ஆட்சிக்கு ஆதரவு’ என்கிற பாலிசிக்கு இந்த முறை ராகுல் காந்தி முற்றுப்புள்ளி வைக்கச் சொல்லியிருக்கிறார். ஆனால், “தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி” என்பதில் ஸ்டாலின் பிடிவாதமாக இருக்க, கூட்டணிக்குள் புகைச்சல் ஆரம்பமாகிவிட்டது.

we-r-hiring

பல கட்டப் மறைமுக பேச்சுவார்த்தைகள் நடத்தியும், திமுக தரப்பில் ‘பவர் ஷேரிங்’ குறித்து எந்த உறுதியான பதிலும் வராததால், காங்கிரஸ் தலைமை கடும் அதிருப்தியில் இருக்கிறது.

மார்ச் முதல் வாரம் – தீர்மானிக்கும் காலம்?
காங்கிரஸ் தரப்பு இப்போது ஒரு ‘வெயிட்டிங் கேம்’ ஆடத் தொடங்கியுள்ளது. மார்ச் முதல் வாரம் வரை திமுகவின் பதிலுக்காகக் காத்திருக்கப் போகிறார்கள். திமுக இறங்கி வந்து அதிகாரப் பகிர்வுக்குச் சம்மதித்தால், மார்ச் 5-ம் தேதி சென்னை வரும் ராகுல் காந்தியும், முதல்வர் ஸ்டாலினும் சந்தித்து ‘ஆல் இஸ் வெல்’ எனப் புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள்.

ஆனால், திமுக மௌனம் காத்தால்? அங்கேதான் இருக்கிறது காங்கிரஸின் மாஸ்டர் பிளான்!

புதிய அரசியல் சாத்தியம்?
மார்ச் 5-ம் தேதி சென்னை புறநகரில் காங்கிரஸ் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் மற்றும் பேரணிக்குத் திட்டமிட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால்:

கூட்டணிக்கு ‘நோ’: இதுவரை இந்தப் பேரணிக்கு திமுகவிற்கோ அல்லது மற்ற கூட்டணி கட்சிகளுக்கோ அழைப்பு அனுப்பப்படவில்லை. இது காங்கிரஸின் தனித்து நிற்கும் வலிமையைக் காட்டப்போகும் ‘சிக்னல்’.

விஜய் என்ட்ரி: ஒருவேளை மார்ச் 2-3-க்குள் திமுக பிடி கொடுக்காவிட்டால், தமிழக அரசியல் களத்தையே புரட்டிப் போடப்போகும் அந்தச் சம்பவம் நடக்கலாம். ஆம், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் கைகோர்க்க காங்கிரஸ் மேலிடம் ரகசியப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. அதாவது விஜயுடன் ஒரே மேடையில் தோன்றி ஒன்றாக வாக்கிங் செல்ல இருப்பதாக கூறி உள்ளனர்.

“மார்ச் 5-ம் தேதி மேடையில் ராகுல் காந்தியும் – தளபதி விஜய்யும் கைகோர்த்து நடந்து வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை” என்கிறார்கள் சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தில். விஜய் ஆட்சியில் பங்கு தர ரெடி, 5-6 அமைச்சரவை பதவி தர ரெடி,, நிறைய பொறுப்புகளை வழங்க ரெடி.. 100 இடங்கள் வரை கூட காங்கிரசுக்கு தவெக வழங்கும். இதுதான் காங்கிரசை பலமாக்க ஒரே வழி என்று ராகுல் காந்தி நினைக்கிறாராம். இதற்கு சமமாக திமுக ஆஃபர் தர வேண்டும் என்று ராகுல் நினைக்கிறாராம்.

அரசியல் சூழல் சூடுபிடிப்பு
ராகுலின் இந்த சென்னை விசிட், திமுகவை பணிய வைப்பதற்கான காய் நகர்த்தலாம் அல்லது புதிய கூட்டணியின் தொடக்கமா என்பதை மார்ச் முதல் வாரம் உறுதி செய்யும். தமிழக அரசியலில் அடுத்த சில நாட்கள் அனல் பறக்கப் போவது மட்டும் உறுதி!

காங்கிரசுக்கு செக் வைத்த ஸ்டாலின்! ஜெல் ஆகாத அதிமுக கூட்டணி? தராசு ஷ்யாம் நேர்காணல்!

MUST READ