spot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்அதிமுகவில் இணைந்தார் லீமா ரோஸ் …

அதிமுகவில் இணைந்தார் லீமா ரோஸ் …

-

- Advertisement -

லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ், எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.அதிமுகவில் இணைந்ததா் லீமா ரோஸ் …

சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த லீமா ரோஸ், அதிமுக உறுப்பினராக அதிகாரப்பூர்வமாக இணைந்தார். கடந்த 14 ஆண்டுகளுக்கு மேல் இந்திய ஜனநாயகக் கட்சி (ஐ.ஜே.கே.)யில் செயல்பட்டு வந்தாா். அக்கட்சியில் இணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்திருந்தார். ஆனால், கட்சித் தலைமை தன்னை புற்க்கணிப்பதாகவும், சமீபத்தில் நடந்த மாநாட்டிற்கு கூட அழைக்கவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், அதனைத் தொடர்ந்து கட்சியை விட்டு விலகி அதிமுகவில் இணைந்ததாகத் தெரிவித்தார்.

we-r-hiring

லீமா ரோஸின் குடும்ப உறுப்பினர்களும் அரசியலில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அவரது மகன் சார்லஸ் மார்ட்டின் தற்போது லட்சிய ஜனநாயக கட்சியை நடத்தி வருகிறாா். மேலும், அவரது மருமகன் ஆதவ் அர்ஜூனா அர்ஜூனா தமிழக வெற்றிக் கழகம் (தவெக)கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளாா்.

அதேபோன்று, லீமா ரோஸின் மற்றொரு மகன் டைசன், தமிழர் விடியல் கட்சியை நடத்தி வருகிறாா். குடும்ப உறுப்பினர்கள் பல்வேறு கட்சிகளில் செயல்பட்டு வரும் நிலையில், மகன் மருமகன் உள்ள கட்சிக்கு செல்லாத லீமா ரோஸ் அதிமுகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

காங்கிரஸில் சிலர் மலிவான அரசியல் செய்கின்றனர் – விடுதலை ராஜேந்திரன்

MUST READ