200 தொகுதிகளிலும் வென்று வரலாறு படைப்போம் என்பதுதான் எனது பிறந்தநாள் வாழ்த்து செய்தி என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
வரும் 2026 ஆம் ஆண்டு தோ்தலில் 200 தொகுதிகளிலும் வென்று வரலாறு படைப்போம் என்பது தான் எனது பிறந்த நாளுக்கான வாழ்த்து செய்தி என சென்னை வேப்பேரியில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளாா். திராவிட மாடல் அரசு அனைவருக்குமான அரசு என்றும், மக்களுக்கு அரணாகவும் நம் அரசு அமையும் என்றும் 200 தொகுதிகளிலும் வெல்ல வேண்டும் என்ற உணர்வோடு நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து களத்தில் இறங்கி முழுமுயற்சியோடு பணியாற்ற வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா, கலைஞா் நினைவிடங்களில் தனது பிறந்த நாளையொட்டி துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் மாியாதை செலுத்தினாா். துணை முதல்வருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், எம்.பியுமான கமலஹாசன், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பல்வேறு தலைவா்களும், பிரமுகா்களும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனா்.
சிவப்பு அரிசியை தொடர்ந்து சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?



