spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்சிவப்பு அரிசியை தொடர்ந்து சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

சிவப்பு அரிசியை தொடர்ந்து சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

-

- Advertisement -

சிவப்பு அரிசியை தொடர்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்சிவப்பு அரிசியை தொடர்ந்து சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

சிவப்பு அரிசியில் பல ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. இது பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. அந்த வகையில் இதில் வைட்டமின் பி1, பி3, பி6, மெக்னீசியம், இரும்புச்சத்து போன்ற உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது.

we-r-hiring

அதாவது வெள்ளை அரிசியைவிட அதிக அளவிலான இரும்புச்சத்து இந்த சிவப்பு அரிசியில் உள்ளது. எனவே இதனை தொடர்ந்து சாப்பிடுவது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நல்லது. குறிப்பாக குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு இந்த சிவப்பு அரிசி பயனுள்ளதாக இருக்கும். இதில் உள்ள ஆக்சிஜனேற்ற பண்புகள் உடலுக்கு நன்மை தருகின்றன.

மேலும் இந்த சிவப்பு அரிசியை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கலாம். இந்த அரிசியை சாப்பிடுவதால் ஆஸ்துமா ஆபத்து குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.சிவப்பு அரிசியை தொடர்ந்து சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

அடுத்தது உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சிவப்பு அரிசியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் இதை தினமும் எடுத்துக் கொள்ளலாம். இது கெட்ட கொழுப்புகளை கரைத்து நல்ல கொழுப்புகள் அதிகரிக்க உதவுகிறது.

பெண்கள் மாதவிடாய் காலத்திலும், பிரசவத்திற்கு பின்னரும் இந்த சிவப்பு அரிசியை எடுத்துக் கொள்வதால் உடலுக்கு வலு கிடைக்கும்.

சிவப்பு அரிசி எலும்பு தசை வலிமைக்கும் உதவுகிறது. இது குடலுக்கு நல்லது.சிவப்பு அரிசியை தொடர்ந்து சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

எனவே சிவப்பு அரிசியை சாதமாகவோ, கஞ்சியாகவோ, உப்புமாவாகவோ, ரொட்டியாகவோ சமைத்து சாப்பிடலாம். ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு கப் அளவு சாப்பிடுவது போதுமானது. இந்த அரிசியை எடுத்துக் கொள்வதால் செரிமானம் மெதுவாகும் என்பதால் ஒரே நாளில் அதிக அளவில் சாப்பிடக் கூடாது. இருப்பினும் இது தொடர்பாக வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

MUST READ