spot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்”காங்கிரஸ் இல்லா பாரதம்”… திட்டமிட்டு காய்நகர்த்தும் பா.ஜ.க…தோல்வி பாடம் கற்காத காங்கிரஸ்…

”காங்கிரஸ் இல்லா பாரதம்”… திட்டமிட்டு காய்நகர்த்தும் பா.ஜ.க…தோல்வி பாடம் கற்காத காங்கிரஸ்…

-

- Advertisement -

எந்தனை தேர்தல்களில் தோல்வி அடைந்தாலும் காங்கிரஸ் கட்சி மட்டும் திருந்தவே திருந்தாது என்பதற்கு மேலும் ஒரு உதாரணம் தமிழ்நாட்டில் நடைபெறும் கூத்துக்கள்.”காங்கிரஸ் இல்லா பாரதம்”… திட்டமிட்டு காய்நகர்த்தும் பா.ஜ.க…தோல்வி பாடம் கற்காத காங்கிரஸ்…

இந்திய தேர்தல் களம் கூட்டல் கழித்தல் கணக்குப்படி தான் வெற்றி தோல்விகள் அமைகிறது என்பதை பாஜக தெளிவாக உணர்ந்து இருக்கிறது. அதேபோன்று திமுகவும் உணர்ந்து இருக்கிறது. கடந்த 2017 முதல் திமுக தலைமையில் அமைந்த கூட்டணி தொடர்ந்து வெற்றி அடைந்து வருகிறது. இந்த கூட்டணி பா.ஜ.க.- ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பில் இந்தியாவிற்கே வழிக் காட்டக்கூடிய தாக இருந்து வருகிறது.

we-r-hiring

தமிழ்நாட்டில் எப்படியாவது திமுகவை தோற்கடிக்க வேண்டும், அதற்கு அவர்கள் கட்டமைத்துள்ள கூட்டணியை உடைக்க வேண்டும், திமுக கூட்டணியை பலவீனப் படுத்த வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக பாஜக கடுமையாக முயற்சி செய்து வருகிறது. அதற்காக பாஜக – ஆர்எஸ்எஸ் எடுத்த முயற்சிகள் சாதாரணமானது அல்ல சகுனி மூலை என்று சொல்லக்கூடிய சாணக்கிய மூலையை பயன்படுத்தி திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது.

சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகளில் ஆர்எஸ்எஸ் – பாஜக ஆட்களை நியமனம் செய்து தன் வயப்படுத்திக் கொண்டு அதன் மூலம் திமுகவில் உள்ள சில தலைவர்களை கைது செய்து, மிரட்டி  அதன் மூலமாக திமுகவின் செல்வாக்கை சிதைப்பதற்கு திட்டம் தீட்டினார்கள். அந்த திட்டத்தை திமுக வழக்கறிஞர்கள் அணி மூலம் முறியடித்து விட்டனர்.

அடுத்ததாக தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, நாம் தமிழர் கட்சி எப்போதும் தனித்து போட்டியிடுகிறது. இந்நிலையில் திமுக கூட்டணியை உடைத்தால், அதிலிருந்து வெளியேறும் கட்சிகளுக்கு மாற்று வழி வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சி.

இந்த கட்சி அரசியல் அனுபவம் இல்லாத ஒரு நடிகரால், அரசியல் மையப்படுத்தாத காக்காய் கூட்டம் போன்று கூடிகளைகின்ற இளைஞர்கள் கூட்டத்தை வைத்து தொடங்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கும் தேர்தல் பாதைக்கும் சிறிதும் சம்பந்தமே இல்லாதது. இந்த கட்சியுடன் 100 ஆண்டிற்கு மேல் தேர்தல் அனுபவம் வாய்ந்த காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்க திரைமறைவில் ஆர்எஸ்எஸ் – பாஜக ஆதரவோடு வேலை நடந்து வருகிறது.

தவெக தொடங்கிய அன்றைய தேதியில் இருந்து கொள்கை எதிரி என்று பிரகடனம் செய்த பாஜகவை எதிர்த்து இதுவரை ஒரு வார்த்தை கூட விஜய் விமர்சனம் செய்யவில்லை. அந்த கட்சியோடு காங்கிரஸ் கூட்டணி அமைக்க வேண்டும் என்று மாணிக்தாகூர், திருச்சி வேலுச்சாமி போன்ற சில தலைவர்கள் பேசுவதும், அதற்கு ஆடிட்டர் குருமூர்த்தி ஆதரித்து டுவிட்டரில் பதிவிடுவதும் தெளிவாக புரிந்துக் கொள்ள முடிகிறது.

காங்கிரஸ் கட்சியின் எதிர்கட்சி தலைவர் சமூகநீதியைப் பற்றி பேசுகிறார், பெரியார், அம்பேத்கரை பேசுகிறார், ஓராளவு கொள்கை தெளிவு பெற்று அரசியல் முதுர்ச்சி அடைந்த வராக இருக்கிறார். ஆனால் அவரை சுற்றிலும் ஆர்எஸ்எஸ் – பாஜக ஆதரவு சக்திகள் ஆக்ரமித்து இருக்கிறார்கள் என்பதை கடந்த கால முடிவுகளில் இருந்து புரிந்துக் கொள்ள முடிகிறது.

டெல்லி சட்டமன்ற தேர்தலின் போது காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சியும் கூட்டணி வைத்திருந்தால் அங்கே மீண்டும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்து இருக்கும். பாஜக வெற்றி பெற்றுருக்க முடியாது. அதேபோன்று அரியானா மாநிலத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி கூட்டணி வைத்திருந்தால் அங்கே காங்கிரஸ் ஆட்சியை பிடித்திருக்க முடியும். இப்படி தொடர்ந்து தவறான முடிவெடுக்க  கே.சி.வேணுகோபால் போன்ற ஆர்எஸ்எஸ் ஆதரவு மனநிலை கொண்டவர்களே காரணமாக இருந்திருக்கிறார்கள்.

பீகாரில் தேஜஸ்வி யாதவ் தலைமையில் ஆட்சி அமைய பிரகாசமாக இருந்தது. தேர்தல் நெருக்கத்தில் காங்கிரஸ் கட்சி எடுத்த தவறான நடவடிக்கையினால் அந்த கூட்டணி படுதோல்வி அடைந்தது. இப்படி காங்கிரஸ் கட்சி நாடுமுழுவதும் தோல்வி அடைந்து வருகிறது. காங்கிரஸ் இல்லாத பாரதம் என்கிற பாஜகவின் முழக்கம் வெற்றி பெற்று வருகிறது. இன்னும் எத்தனை தோல்விகள் அடைந்தாலும் காங்கிரஸ் திருந்தாது என்பது மட்டும் உறுதி.

விஜயை நம்பினால் சுடுகாடு நிச்சயம்! விரட்டி விரட்டி வெளுத்த அய்யநாதன்!

MUST READ