Homeசெய்திகள்அரசியல்"திமுக, அதிமுகவில் இனிமேல் யாரும் இருக்க மாட்டார்கள்" – கோவையில் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார்...

“திமுக, அதிமுகவில் இனிமேல் யாரும் இருக்க மாட்டார்கள்” – கோவையில் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி!

-

- Advertisement -

இன்னும் சில மாதங்களில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளிலும் 10 அல்லது 15 நபர்களைத் தவிர வேறு யாரும் இல்லாத நிலை ஏற்படும் என்றும், தமிழக மக்கள் அவர்களை அந்த நிலைக்குக் கொண்டு சென்று நிறுத்தியுள்ளனர் என்றும் தமிழகச் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்."திமுக, அதிமுகவில் இனிமேல் யாரும் இருக்க மாட்டார்கள்" – கோவையில் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி!​கோவை அரசு சட்டக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பின், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார் பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்துப் பேசியதாவது, ​”கோவை அரசு சட்டக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா இன்றும், வரும் ஞாயிற்றுக்கிழமையும் என இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த விழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதி மோகனா அவர்கள் கலந்து கொண்டது நமக்குக் கிடைத்த மிகப் பெரிய பெருமையாகும். பட்டமளிப்பு விழாவிற்கு வந்திருந்த உறவினர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் சரியாகவே செய்யப்பட்டிருந்தன. அத்தனை பேர் ஒன்றாக வரும்போது, அங்குள்ள இடவசதியையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். எனினும் நிர்வாக ரீதியாக வசதிகள் அனைத்தும் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தன.”

முதலமைச்சரின் கரூர் பயணம் மற்றும் அது தொடர்பாக சிபிஐ-யிடம் திமுக புகார் அளித்துள்ளது குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர்,”கரூர் விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றமே ‘தேசிய மனசாட்சியை உலுக்கிய சம்பவம்’ என அவ்வளவு பெரிய வார்த்தையைக் குறிப்பிட்ட பிறகும், இன்னும் திமுகவிற்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. முதலமைச்சர் கரூருக்குச் செல்வதில் இவர்களுக்கு என்ன பயம்? சிபிஐ-யிடம் இவர்களால் என்ன மனு கொடுத்துவிட முடியும்? ஆதவ் அர்ஜுனா மீது இப்போதெல்லாம் என்ன விசாரணை நடத்த வேண்டும் என நினைக்கிறார்கள்? முதலமைச்சர் கரூர் செல்லக் கூடாது என்று திமுகவினர் ஏன் நினைக்கிறார்கள் என்றே தெரியவில்லை.”"திமுக, அதிமுகவில் இனிமேல் யாரும் இருக்க மாட்டார்கள்" – கோவையில் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி!

we-r-hiring

​மேலும், “சிபிஐ தனது வழக்கு விசாரணையைச் சட்டப்படி நடத்தி வருகிறது. தங்களின் ஆட்சிக்காலத்தில் ‘தமிழகத்திற்குள் சிபிஐ வரக்கூடாது’ என்று தடை விதித்த திமுகவினர், இப்போது எதற்காகச் சிபிஐ வேண்டும் என்று தேடி ஓடுகிறார்கள்? திமுகவினர் சிபிஐ அமைப்பைத் தங்களின் கைகளில் வைத்துக் கொண்டு எப்படியெல்லாம் விளையாடினார்கள்? முதலமைச்சரையும், நமது கட்சியையும் முடக்கப் பார்த்தார்கள். ஆனால், அவர்களின் முயற்சிகள் அனைத்திலும் தோற்றுப் போனார்கள். திமுகவின் வழக்கறிஞர் குழு இன்னும் எஃப்.ஐ.ஆர் (FIR) பிரதியைக் கூட முழுமையாகப் படிக்கவில்லை என்றுதான் நினைக்கிறேன். கட்சியில் வேலை செய்ய ஆள் இல்லை என்றால் ஆர்.எஸ்.பாரதி அவராகவே சென்று ஏதேனும் ஒரு புகாரை அளிப்பார், அதற்கெல்லாம் நாம் பதில் சொல்லத் தேவையில்லை,” என்று சாடினார். ​”திமுகவும் அதிமுகவும் இணைந்து எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துவிட்டன. இரண்டு கட்சிகளும் ரகசியமாகச் சேர்ந்து கொண்டு மீண்டும் ஆட்சி அமைக்கப் பார்த்தார்கள்; அதுவும் மக்களால் முறியடிக்கப்பட்டுத் தோல்வியில் முடிந்தது. இன்னும் சில மாதங்களில் இந்த இரு கட்சிகளிலும் ஆளே இல்லாத நிலை உருவாகும். 10 முதல் 15 நபர்களைத் தவிர திமுக, அதிமுகவில் வேறு யாரும் இருக்க மாட்டார்கள். அந்த நிலைமைக்குத்தான் தமிழக மக்கள் இவர்களைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்."திமுக, அதிமுகவில் இனிமேல் யாரும் இருக்க மாட்டார்கள்" – கோவையில் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி!” ​சமூக நீதித்துறை பெயர் மாற்றம் & திருமாவளவன் விமர்சனம்
ஆதிதிராவிடர் நலத்துறையைச் ‘சமூக நீதித்துறை’ எனப் பெயர் மாற்றியதற்குத் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கருத்து தெரிவிப்பது குறித்த கேள்விக்கு, “இது அனைத்துத் தரப்பு மக்களின் பல ஆண்டுகாலக் கோரிக்கையாகும். மக்களின் அந்த நீண்ட நாள் கோரிக்கையை ஏற்றுத்தான் தற்போதைய அரசு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் பெயர் மாற்றத்தைச் செய்துள்ளது,” என்றார். கூட்டணியில் இருந்து கொண்டே திருமாவளவன் விமர்சனம் செய்வது குறித்துப் பேசிய அமைச்சர், “அரசியலில் ஒரு சில விஷயங்கள் மற்றும் கருத்துகளை நாங்கள் சாதாரணமாகவே எடுத்துக் கொள்வோம். இதில் பெரிய அளவிலான பிரச்சினைகள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஏற்கனவே கூட்டணித் தலைவர்களுடன் ஒருமுறை ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இரண்டாவது முறையாகக் கூட்டணிக் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மீண்டும் நடைபெறும். முதலமைச்சரின் கரூர் பயணம் குறித்த முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும், அதுவரை பொறுத்திருங்கள்,” என்று கூறி விடைபெற்றார்.

அதிமுக-வில் சசிகலா, டிடிவி தினகரன் இணைய வாய்ப்பு? பொருத்திருந்து பாருங்கள் என முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் பரபரப்பு பேட்டி! ​

MUST READ