Homeசெய்திகள்அரசியல்ஊழல்வாதிகளைத் த.வெ.க.வில் இணைக்கும் விஜய்: வரும் தேர்தல்களில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் – அக்ரி கிருஷ்ணமூர்த்தி...

ஊழல்வாதிகளைத் த.வெ.க.வில் இணைக்கும் விஜய்: வரும் தேர்தல்களில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் – அக்ரி கிருஷ்ணமூர்த்தி கடும் விமர்சனம்!

-

- Advertisement -

தூய சக்தி, தூய்மையான ஆட்சி என்று கூறிக்கொள்ளும் விஜய், கொள்ளையடித்தவர்களுக்குத் தனது தமிழக வெற்றி கழகத்தில் அடைக்கலம் தருகிறார். பதவி மோகத்தாலும், சொத்துக்களைக் காப்பாற்றிக்கொள்ளவும் த.வெ.க.வில் தஞ்சமடைந்துள்ளவர்களுக்கு வரவிருக்கும் தேர்தல்களில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்” என்று அதிமுக மாநில விவசாயப் பிரிவு செயலாளரும், அக்கட்சியின் கொறடாவுமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
விஜய்

பெரம்பலூரில் அதிமுக மாவட்ட செயலாளர் விஜிஎம்.வெங்கடாஜலம் தலைமையில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:
​”தூய்மையான ஆட்சி தருவேன் என்று சொல்லிக்கொண்டே, ஊழல் செய்து கொள்ளையடித்தவர்களைத் தனது கட்சியில் இணைத்து அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் விஜய். இதைத் தமிழ்நாட்டு மக்கள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல்களில் மக்கள் இவர்களுக்குத் தக்க பதிலடி தருவார்கள்.”

we-r-hiring

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் குறித்த விவகாரத்தில், “கட்சியின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்ட 25 எம்.எல்.ஏ.க்களில், 21 பேர் எடப்பாடியாரிடம் நேரில் மன்னிப்பு கேட்டு மீண்டும் அதிமுகவிற்குத் திரும்பிவிட்டனர். மீதமுள்ள ஒரு சிலர், தாங்கள் சம்பாதித்த சொத்துக்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், தங்கள் மீதான வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்ளவும் ரகசியக் கூட்டணி அமைத்து த.வெ.க.வில் அடைக்கலம் தேடிச் சென்றுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

அரசியல் களத்தில் ஆளுங்கட்சி மற்றும் விஜய் தலைமையிலான த.வெ.க. மீது அதிமுகவின் மூத்த தலைவர்கள் இத்தகைய கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ