spot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்கிரிஷ் சோடங்கர் கருத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது….

கிரிஷ் சோடங்கர் கருத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது….

-

- Advertisement -

கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்த கருத்துக்கு சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு வலுக்கிறது.கிரிஷ் சோடங்கர் கருத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது….

காங்கிரஸ் கூட்டணி குறித்து கிரிஷ் சோடங்கர் தெரிவித்த கருத்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி தொடர்பாக அவர் அளித்த நாளிதழ் பேட்டியில், தவெக காங்கிரசுடன் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்ததாக கூறியிருந்தார். இந்தக் கருத்துக்கு தற்போது சொந்தக் கட்சியிலேயே எதிர்ப்பு வலுத்துள்ளது.

we-r-hiring

இது குறித்து விஜய் வசந்த் விளக்கம் அளித்துள்ளார். கிரிஷ் சோடங்கர் கூறியவை அவரது தனிப்பட்ட கருத்து மட்டுமே என்றும், அது காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளாா். மேலும், திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து இணக்கமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளாா்.

அதேபோன்று, கே.சி. வேணுகோபால் மற்றும் டி.எஸ். சிங் தேவ் ஆகியோர் முதலமைச்சரை சந்தித்து கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நேரத்தில் கிரிஷ் சோடங்கரின் பேட்டி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், செல்வப்பெருந்தகை திட்டவட்டமாக பதிலளித்துள்ளார். திமுகவுடன்தான் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், வேறு எந்தக் கட்சியுடனும் பேச்சு நடத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளாா். தேர்தல் கூட்டணி தொடர்பாக திமுகவுடனே காங்கிரஸ் உரையாடி வருவதாகவும் உறுதி செய்துள்ளாா்.

மேலும், மதவாத மற்றும் பாசிச சக்திகள் தமிழ்நாட்டில் காலூன்ற முயற்சி செய்கின்றன என்றும், கிரிஷ் சோடங்கர் கருத்தை திரித்து சிலர் அரசியல் லாபம் பார்க்க முயலுகின்றனர் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளாா். மறைமுகமாக பாஜகவுக்கு உதவ சில சக்திகள் செயல்படுகின்றன என்றாலும், அந்த முயற்சிகள் பலிக்காது என்றும், திமுகவுடன் நல்லுறவு தொடரும் என்றும் தெரிவித்துள்ளாா்.

தமிழக காங்கிரஸ், கட்சி மேலிட பொறுப்பாளர் கூறுவதையே சொந்த கருத்து என சக கட்சியினர் கூறுவதால், யார் கூறுவதை தான் கட்சியின் நிலைப்பாடாக எடுப்பது என தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கும் கூட்டணி  பேரம்…திமுகவா, தவெகவா – காங்கிரஸின் அடுத்த கட்ட நகர்வு என்ன?

MUST READ