Homeசெய்திகள்அரசியல்அதிமுகவில் சமரசம்…சபாநாயகரிடம் மனுவை வாபஸ் பெற்ற எஸ்.பி.வேலுமணி…

அதிமுகவில் சமரசம்…சபாநாயகரிடம் மனுவை வாபஸ் பெற்ற எஸ்.பி.வேலுமணி…

-

- Advertisement -

அதிமுகவில் ஏற்பட்ட சமரசத்தைத் தொடர்ந்து, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் எஸ்.பி. வேலுமணி தரப்பினர் தங்களது வாபஸ் கடிதத்தை அளித்துள்ளனர். அதோடு, அவர்கள் மீது அளிக்கப்பட்டிருந்த ஒழுங்கு நடவடிக்கை மனுவும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் பிளவுபட்டிருந்த அதிமுகவின் இரு பிரிவினரும் மீண்டும் இணைந்துள்ளனர்.அதிமுகவில் சமரசம்…சபாநாயகரிடம் மனுவை வாபஸ் பெற்ற எஸ்.பி.வேலுமணி…

அதிமுகவில் ஏற்பட்டிருந்த உள்கட்சிப் பிளவு தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி அணியும், எஸ்.பி. வேலுமணி அணியும் மீண்டும் ஒன்றிணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில், எஸ்.பி. வேலுமணி தரப்பு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்து தாங்கள் முன்பு வழங்கிய மனுக்களை வாபஸ் பெறும் கடிதத்தை அளித்துள்ளது.

we-r-hiring

முன்னதாக, அதிமுகவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக எஸ்.பி. வேலுமணி தரப்பைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். மேலும், சட்டமன்ற குழுத் தலைவர் மற்றும் கொறடா பதவிகள் தொடர்பாகவும் இரு தரப்பும் தனித்தனியாக மனுக்கள் அளித்திருந்தன. எஸ்.பி. வேலுமணி தரப்பு, அவரையே சட்டமன்ற குழுத் தலைவராகவும், விஜயபாஸ்கரை கொறடாவாகவும் அறிவிக்க கோரிக்கை வைத்திருந்தது. மறுபக்கம், எடப்பாடி பழனிசாமி தரப்பு, பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் அவரே சட்டமன்ற குழுத் தலைவராகவும், அக்ரி கிருஷ்ணமூர்த்தி கொறடாவாகவும் தொடர்வார்கள் என மனு அளித்திருந்தது.

இந்த நிலையில், இன்று எடப்பாடி பழனிசாமியை எஸ்.பி. வேலுமணி தரப்பு நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. அதனைத் தொடர்ந்து, சபாநாயகரிடம் அளித்திருந்த அனைத்து மனுக்களையும் எஸ்.பி. வேலுமணி தரப்பு திரும்பப் பெற்றது. அதோடு, தவெக அரசுக்கு அளித்த ஆதரவையும் வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, எஸ்.பி. வேலுமணி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மனுவும் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம், அதிமுக மீண்டும் ஒருங்கிணைந்துள்ளதாக உறுதியாகியுள்ளது.

ஆனால், இந்த இணைப்பு முயற்சியில் சி.வி. சண்முகம் பங்கேற்காதது அரசியல் வட்டாரங்களில் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. அவர் இன்னும் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவில்லை என்றும், தன்னுடைய நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்றும் கூறப்படுவதால், அடுத்த கட்டமாக அவர் எவ்வாறு செயல்படப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

பல்கலை.வேந்தர் விவகாரம் – அமைச்சர் விஸ்வநாதனுக்கு விசிக கடும் கண்டனம்!

MUST READ