Homeசெய்திகள்தமிழ்நாடுபல்கலை.வேந்தர் விவகாரம் – அமைச்சர் விஸ்வநாதனுக்கு விசிக கடும் கண்டனம்!

பல்கலை.வேந்தர் விவகாரம் – அமைச்சர் விஸ்வநாதனுக்கு விசிக கடும் கண்டனம்!

-

- Advertisement -

தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரே இருக்க வேண்டும் என்ற விவகாரம் மீண்டும் அரசியல் சர்ச்சையை கிளப்பியுள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்த கருத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.பல்கலை.வேந்தர் விவகாரம் – அமைச்சர் விஸ்வநாதனுக்கு விசிக கடும் கண்டனம்!மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநருக்கு பதிலாக முதலமைச்சரே இருக்க வேண்டும் என்ற மசோதாக்களை முந்தைய அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. ஆனால், அப்போதைய ஆளுநர் அவற்றுக்கு நீண்ட காலம் ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் வைத்திருந்தார். இதையடுத்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, நீண்ட காலமாக நிலுவையில் இருந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து அவை சட்டமாக அமலுக்கு வந்ததாக வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. இதன் மூலம் மாநில உரிமையின் அடிப்படையில் முதலமைச்சரே பல்கலைக்கழக வேந்தராக இருக்கலாம் என்ற நிலைப்பாடு உறுதியாகியது.

இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், “புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு கொள்கை முடிவுகளை முதலமைச்சர் எடுப்பார். முந்தைய அரசின் நிலைப்பாட்டை நாங்கள் கட்டாயமாக பின்பற்ற வேண்டிய அவசியமில்லை” என்று தெரிவித்தார். மேலும், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆலோசனையுடன் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்றும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறினார்.

we-r-hiring

அமைச்சரின் இந்த கருத்துக்கு விசிக எம்.பி. ரவிக்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது வலைதள பதிவில், “பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சரே இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை கைவிடுவது மாநில உரிமையை புறக்கணிப்பதுடன், உச்சநீதிமன்ற தீர்ப்பையும் அவமதிப்பதாகும்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “இந்த கருத்தை அமைச்சர் முதலமைச்சரின் ஒப்புதலுடன் தான் தெரிவித்தாரா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக காவல்துறைக்கு விரைவில் நிரந்தர டிஜிபி? – 3 அதிகாரிகள் பட்டியலை வழங்கிய மத்திய தேர்வாணையம்

MUST READ