Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழக காவல்துறைக்கு விரைவில் நிரந்தர டிஜிபி? – 3 அதிகாரிகள் பட்டியலை வழங்கிய மத்திய தேர்வாணையம்

தமிழக காவல்துறைக்கு விரைவில் நிரந்தர டிஜிபி? – 3 அதிகாரிகள் பட்டியலை வழங்கிய மத்திய தேர்வாணையம்

-

- Advertisement -

தமிழக காவல்துறையின் நிரந்தர சட்டம் ஒழுங்கு டிஜிபி நியமனம் தொடர்பாக முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய தேர்வாணையம் மூன்று மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்களைக் கொண்ட பட்டியலை தமிழக அரசுக்கு வழங்கியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தமிழக காவல்துறைக்கு விரைவில் நிரந்தர டிஜிபி? – 3 அதிகாரிகள் பட்டியலை வழங்கிய மத்திய தேர்வாணையம்

தமிழகத்தில் தேர்தல் காலத்தில், சந்தீப் ராய் ரத்தோரை சட்டம் ஒழுங்கு டிஜிபியாக தேர்தல் ஆணையம் நியமித்திருந்தது. தேர்தல் முடிவடைந்த பின்னரும் நிரந்தர டிஜிபி நியமனம் நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் அரசு நிரந்தர டிஜிபி நியமனத்தில் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இதற்கான ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் மத்திய தேர்வாணையத்தில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

we-r-hiring

தமிழக அரசு அனுப்பியிருந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் பட்டியலை மத்திய தேர்வாணைய அதிகாரிகள் பரிசீலித்ததாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னர், மூன்று அதிகாரிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியல் மாநில அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் பட்டியலில் ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர், மகேஷ் குமார் அகர்வால் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் ஒருவரை தமிழக காவல்துறையின் நிரந்தர டிஜிபியாக நியமிக்கும் அறிவிப்பு அடுத்த இரண்டு நாட்களில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அநேகமாக இரண்டு நாட்களில் தமிழக காவல்துறையின் நிரந்தர டிஜிபி யார்? என்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

விவசாயிகள் கடன் தள்ளுபடி ஏமாற்றம் – விஜய் அரசை சாடும் சங்கங்கள்…

MUST READ