Homeசெய்திகள்அரசியல்வேலுமணி அணியில் இருந்து அடுத்தடுத்து விலகும் எம்.எல்.ஏக்கள்…எடப்பாடியின் கை மீண்டும் ஓங்குகிறது!

வேலுமணி அணியில் இருந்து அடுத்தடுத்து விலகும் எம்.எல்.ஏக்கள்…எடப்பாடியின் கை மீண்டும் ஓங்குகிறது!

-

- Advertisement -

எஸ்.பி. வேலுமணி தரப்பிலிருந்து 5 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து விலகியுள்ளனர். இதனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கை மீண்டும் ஓங்கியுள்ளது.வேலுமணி அணியில் இருந்து அடுத்தடுத்து விலகும் எம்.எல்.ஏக்கள்…எடப்பாடியின் கை மீண்டும் ஓங்குகிறது!

தமிழக அரசியலில் அடுத்தடுத்த அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில், அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிளவு மேலும் தீவிரமடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி அணிகளாக பிரிந்துள்ள அதிமுகவில், தற்போது எம்.எல்.ஏக்கள் ஆதரவு பலத்தில் முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

we-r-hiring

தவெக அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற வேலுமணி அணியில் இருந்து அடுத்தடுத்த எம்.எல்.ஏக்கள் இபிஎஸ் அணிக்கு மாறி வருகின்றனர். காலை ஆற்காடு தொகுதி எம்.எல்.ஏ சுகுமார் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த நிலையில், பின்னர் பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ மோகன் மற்றும் அந்தியூர் தொகுதி எம்.எல்.ஏ ஹரி பாஸ்கரும் அவரை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். இதன் மூலம் இபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 22-இல் இருந்து 25 ஆக உயர்ந்ததுள்ளது.

இதற்கிடையில், வேலுமணி அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் மூன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ சத்யபாமா மற்றும் பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ ஜெயக்குமார் ஆகியோர் தங்களது ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் JCD பிரபாகரிடம் வழங்கினர். அந்த ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தங்களது சொந்த காரணங்களுக்காக எந்தவித அழுத்தமும் இன்றி ராஜினாமா செய்வதாக அவர்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தாராபுரம், மதுராந்தகம் மற்றும் பெருந்துறை தொகுதிகள் காலியாக அறிவிக்கப்படவுள்ளன. ஏற்கனவே காலியாக உள்ள திருச்சி கிழக்கு தொகுதியுடன் சேர்த்து தற்போது காலியிடங்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இந்த நான்கு தொகுதிகளுக்கும் அடுத்த 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்த உடனேயே அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை சந்தித்து தவெக கட்சியில் இணைந்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சில அதிமுக எம்.எல்.ஏக்களும் தவெகவில் இணையத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவதால், தமிழக அரசியலில் அடுத்தடுத்த மாற்றங்கள் நிகழக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த அரசியல் பரபரப்புகளால் அதிமுக எம்.எல்.ஏக்களின் மொத்த எண்ணிக்கை 47-இல் இருந்து 44 ஆக குறைந்துள்ளது. அதேசமயம், சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கையும் 115 ஆக குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய சூழல் தமிழக அரசியலில் புதிய கூட்டணிகள் மற்றும் அதிகார சமநிலைகளில் மாற்றங்களை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது.

“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்

MUST READ