spot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்திமுக விருப்ப மனு இன்று முதல் விநியோகம் …

திமுக விருப்ப மனு இன்று முதல் விநியோகம் …

-

- Advertisement -

திமுக சார்பில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக  மார்ச் 02 ஆம் தேதி வரை விருப்ப மனு விநியோகிப்படுகிறது. இதுவரை 200க்கும் மேற்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.திமுக விருப்ப மனு இன்று முதல் விநியோகம் …திமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட  மார்ச் 02 ஆம் தேதி வரை விருப்ப மனு விநியோகிப்படுகிறது. முதல் நாளான நேற்று இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. 200 மேற்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இதில் 40 மேற்பட்ட மனுக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் போட்டியிட டி.ஆர்.பாலுவும், மீண்டும் ஆயிரம் விளக்கு தொகுதியில் முதலமைச்சர் போட்டியிட திமுக சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் சிற்றரசும் விருப்பமனு தாக்கல் செய்தனர்.

we-r-hiring

நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் மாநில உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி தமிழ்நாட்டில் பணிசெய்திடும் வகையில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என முசிறி திமுக இளைஞரணி நகரச் செயலாளர் தங்க கோபிநாத் என்பவர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்.

அமைச்சர் சி.வி.கணேசன் திட்டக்குடி தொகுதியில் போடியிடவும், திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சந்திரகுமார் ஆகியோர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட விருப்ப மனு வழங்கியுள்ளனர்.

விஜயின் முன்னாள் செய்தி தொடர்பாளர், புலி படத்தயாரிப்பாளர் அண்மையில் திமுகவில் இணைந்த பி.டி.செல்வகுமார் கன்னியகுமரியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தார்.

விருப்பமனு தாக்கல் செய்ய வந்த திருப்பூர் செல்வராஜ் விருப்பமனு கொடுக்க வந்த போது கால் இடறி கிழே விழ இருந்தவரை அருகில் இருந்தவர்கள் பாதுகாப்பாக பிடித்துக் கொண்டனர்.  இதில் காலில் அடிப்பட்டவர் விருப்பமனு வழங்கிய பின்னர் ஒருபக்கமாக கால் தாங்கி தாங்கி நடந்து சென்றார்.

பல்லடம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட மூன்று பேர் ஒரே நேரத்தில் ஒன்றாக வந்து விருப்ப மனுக்களை தாக்கல் செய்தது கவனம் பெற்றது.

“தமிழே” என்று அழைத்திடும்போது கிடைத்திடும் இன்பம் மகத்தானது – முதல்வர்

MUST READ