இந்தியா கூட்டணிக்கு ஓருங்கிணைந்த தலைமை அவசியம் எனவும், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அல்லது மேற்குவங்க முதல்வர் மம்தா தலைமையேற்க வேண்டும் என உத்தவ் சிவசேனா கட்சி வலியுறுத்தியுள்ளது.
சிவசேனா(உத்தவ் தாக்கரே) கடசியின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘சாம்னா’ வெளியிட்டுள்ள கட்டுரையில், இந்தியா கூட்டணி குறித்து கருத்து தெரவித்துள்ளது.

அதில், இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்குள் வெவ்வேறு மாநிலங்களில் நிலவும் முரண்பாடுகளை களைந்து, ஒற்றுமையாக ஒரு தலைவருக்குக் கீழ் பணியாற்ற வேண்டும். அந்த தலைவர் ஸ்டாலினா, மம்தாவா அல்லது வேற ஒருவரா என்பதை சீக்கிரம் முடிவு செய்வது அவசியம்” என்று ‘சாம்னா’ நாளிதழ் வலியுறுத்தியுள்ளது.
மேலும், கூட்டணிக்குள் உள்ள சிக்கல்களை தீர்க்காமல், கட்சிகள் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வதை தவிர்க்காவிட்டால் அது கூட்டணிக்கு ஆபத்தாகும் என்றும் எசச்ரித்துள்ளது.
இந்தியா கூட்டணியில் ஒத்தசைவு ஏற்பட்டு ஒரே திசையில் பயணிக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளது. இந்தக் கருத்து வெளியீடு, இந்தியா கூட்டணியின் எதிர்கால அரசியல் பாதை குறித்து புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது.
கூட்டணி பேச்சுவார்த்தை… காங். பிரதிநிதியை சந்திக்க மறுத்த திமுக! உமாபதி நேர்காணல்!


