spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாபீகார் சட்டமன்ற தேர்தல் : தேஜஸ்வி யாதவ் பின்னடைவு! து. முதல்வர் சாம்ராட் சர்மா உள்ளிட்ட...

பீகார் சட்டமன்ற தேர்தல் : தேஜஸ்வி யாதவ் பின்னடைவு! து. முதல்வர் சாம்ராட் சர்மா உள்ளிட்ட பாஜகவினர் முன்னிலை!

-

- Advertisement -

பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஆர்.ஜே.டி முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் பின்னடைவை சந்தித்துள்ளார். அதேவேளையில் பாஜக துணை முதலமைச்சர் சாம்ராட் சர்மா உள்ளிட்டோர் முன்னிலை வகித்து வருகின்றனர்.

we-r-hiring

பீகார் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்புடன் நடைபெற்ற வருகிறது. காலை 11 நிலவரப்படி ஆளும் ஜே.டி.யு – பாஜக கூட்டணி 190 தொகுதிகளுக்கும் மேலாக வகித்து வருகிறது.  முக்கிய வேட்பாளர்களின் முன்னணி நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. இந்தியாh கூட்டணி 50 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. பீகாரில் ஆட்சி அமைக்க 122 இடங்கள் தேவையான நிலையில், அருதி பெரும்பான்மைக்கு தேவை இடங்களை விட அதிக  இடங்களில் என்டிஏ கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில், பீகார் சட்டமன்றத் தேர்தலில் பல்வேறு இடங்களில் முக்கிய வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர். ஆர்.ஜே.டி தலைவரும், இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் ரகோபூர் தொகுதியில் முன்னிலை வகித்து வந்த நிலையில், 3வது சுற்றில் பின்னடைவை சந்தித்துள்ளார். பாஜக வேட்பாளர் சதிஷ்குமார், தேஜஸ்வியை விட 1,273 வாக்குகள் முன்னிலை வகிக்கிறார். அலிநகர் தொகுதியில், பாஜக சார்பில் போட்டியிட்ட 25 வயதான பாடகி மைதிலி தாக்கூர் முன்னிலை வகித்து வருகிறார். ஆர்.ஜே.டி வேட்பாளர் பினோத் மிஸ்ராவை விட 8000 வாக்குகள் வித்தியாசத்தில் மைதிலி தாக்கூர் முன்னிலை வகிக்கிறார்.

தாராப்பூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக துணை முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி, ஆர்.ஜே.டி வேட்பாளர் அருண் குமாரை விட 6000 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகிக்கிறார். லாலு பிரசாத்தின் மூத்த மகன் தேஜ்பிரதாப் யாதவ், மஹுவா தொகுதியில் போட்டியிட்ட நிலையில் அவர் பின்னடைவை சந்தித்து வருகிறார். இந்தியா கூட்டணி துணை முதலமைச்சர் வேட்பாளர்  விஜய் சின்ஹா லக்கிசராய் தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார். ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த வேட்பாளர் ஆனந்த் குமார் சிங், மோகாமா தொகுதியில் ஆர்.ஜே.டி வேட்பாளர் வீணா தேவியை விட முன்னிலை வகித்து வருகிறார்.

MUST READ