Homeசெய்திகள்இந்தியாபல்கலைக்கழக குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தை…பீதியில் மக்கள்

பல்கலைக்கழக குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தை…பீதியில் மக்கள்

-

- Advertisement -

திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக பணியாளர்கள் குடியிருப்பு அருகே இரவில் வந்த கோழி கூண்டில் உள்ள கோழியை கவ்வி செல்ல முயலும்  சிறுத்தை. சி.சி.டி.வி.கேமிரா காட்சிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பல்கலைக்கழக குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தை…பீதியில் மக்கள்திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக பணியாளர்கள் குடியிருப்பில் நேற்று இரவு இரவு 10:30 மணி முதல் 11 மணி வரை ஒரு சிறுத்தை சுற்றி வந்தது. அங்கு கூண்டில் வளர்க்கப்பட்டு வந்த கோழியை கண்ட சிறுத்தை கூண்டில் உள்ள கோழியை கவ்வி செல்ல முயன்றது. இதனால் கோழி அலறிக்கொண்டு இங்கும் அங்கும் ஓடியதால் சிறுத்தை கூண்டில் உள்ள கோழியை எடுக்க முடியாமல் சென்றது.

கோழி அலறல் சத்தம் கேட்ட  அங்கிருந்த ஊழியர்கள் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சிறுத்தை நடமாடும் காட்சிகள் அங்கு வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகிய நிலையில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தை  நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

we-r-hiring

சிறுத்தையை பிடிப்பதற்காக அந்த பகுதியை சுற்றி 3 கூண்டுகள் வைக்கப்பட்டு இதுவரை ஒரு மாதங்களாகியும்  பிடிபடாமல் வருகிறது.  கடந்த இரண்டு வாரங்களாக சிறுத்தை நடமாட்டம் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் சிறுத்தை வந்துள்ளதால் பணியாளர்கள், விடுதியில் உள்ள மாணவர்களும், பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வனத்துறையில் கேட்டு கொண்டுள்ளனர்.

பாஜக மாமன்ற உறுப்பினரை முற்றுகையிட்டு திமுக உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…

MUST READ