spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா"சந்திரயான்-3 மிகப்பெரிய வெற்றியாகும்"- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

“சந்திரயான்-3 மிகப்பெரிய வெற்றியாகும்”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

-

- Advertisement -

 

"விவசாயிகளோடு மத்திய அரசு தோளோடு தோள் நிற்கிறது"- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!
Photo: PMO

104-வது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் வானொலி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “நாட்டு மக்கள் அனைவரின் முயற்சியாலும் சந்திரயான்- 3 திட்டத்திற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. சந்திரயான்- 3 வெற்றியில் நமது விஞ்ஞானிகளுடன், மற்ற துறைகளும் முக்கிய பங்காற்றியுள்ளன. வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டிற்கு இந்தியா முழுவதுமாகத் தயாராக உள்ளது.

we-r-hiring

சில மாதங்களில் தேர்தல்- மத்திய பிரதேசத்தில் அமைச்சரவை விரிவாக்கம்!

ஜி20 தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுக் கொண்டதில் இருந்து உலக நாடுகளில் நமக்கு பெருமை கிடைத்துள்ளது. ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி நாட்டிற்கு பெருமைச் சேர்க்க அனைவரும் ஒன்று சேர வேண்டும். சீனாவில் நடந்த உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

நிலவில் தரையிறங்குதல், ஊர்ந்துச் செல்தல் இலக்குகள் நிறைவேற்றம்!

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க 40 நாடுகளின் தலைவர்கள், உலக அமைப்புகளின் தலைவர்கள் இந்திய வருகின்றனர். டெல்லியில் நடக்கும் மாநாடு ஜி20 உச்சி மாநாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய பங்கேற்பாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ