திருப்பதி மலையில் பயங்கர விபத்து: கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்தது! சென்னை பக்தர்கள் லேசான காயங்களுடன் தப்பினர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக சென்னை சேர்ந்த பக்தர்கள் வந்தனர். சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் ஊருக்கு செல்வதற்காக திருமலையில் இருந்து திருப்பதி நோக்கி முதலாவது மலைப்பாதையில் இறங்கிக்கொண்டிருந்தனர். மலைப்பாதையின் இரண்டாவது கிலோமீட்டர் அருகே பிரேக் பழுதானதால் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு சுவரில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது.

இதில் காரில் இருந்த நான்கு பக்தர்கள் லேசான காயங்களுடன் தப்பினர். கார் கவிழ்ந்ததால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த போக்குவரத்து போலீசார் மற்றும் தேவஸ்தானம் அதிகாரிகள் பக்தர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் காரை அப்புறப்படுத்தி திருப்பதிக்கு காரை கிரேன் மூலம் கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


