Homeசெய்திகள்தமிழ்நாடுபிழையான சாதிவாரி கணக்கெடுப்பு முறையைத் திருத்துக: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு திமுக எம்பி டி.ஆர்.பாலு...

பிழையான சாதிவாரி கணக்கெடுப்பு முறையைத் திருத்துக: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு திமுக எம்பி டி.ஆர்.பாலு கடிதம்!

-

- Advertisement -

பல்வேறு காரணங்களைக் காட்டி கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தள்ளி வைக்கப்பட்டிருந்த நாடு தழுவிய இந்திய மக்கள் தொகை பொதுக் கணக்கெடுப்பை அண்மையில் ஒன்றிய அரசு துவக்கியுள்ளது. இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள இந்தப் பணியின் முதல் பகுதி சில நாட்கள் முன் நிறைவடைந்துள்ளது. இரண்டாம் கட்டப் பணியில், ஏனைய பல்வேறு விவரங்களுடன் மக்களின் சாதிக் கணக்கெடுப்பும் மேற்கொள்ளப்பட உள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் உரத்த குரலில் தொடர்ந்து பல ஆண்டுகள் கோரிக்கை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.பிழையான சாதிவாரி கணக்கெடுப்பு முறையைத் திருத்துக: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு திமுக எம்பி டி.ஆர்.பாலு கடிதம்!

இந்நிலையில் ஒன்றிய அரசு பின்பற்ற திட்டமிட்டுள்ள சாதிவாரி கணக்கெடுப்பு வழிமுறை, இதர பின் தங்கிய, மிகவும் பின் தங்கிய மக்களின் உண்மையான எண்ணிக்கையையும் சமூகப் பொருளாதார நிலையையும் உள்ளது உள்ளபடி பிரதிபலிக்கும் வகையில் இல்லாதது குறித்து திமுக உள்ளிட்ட பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். எனவே, இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பை பிழைகள் இன்றி செய்திட வேண்டும் என வலியுறுத்தி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களுக்கு திமுக மக்களவைக் குழுத் தலைவரும் கழகப் பொருளாளருமான டி.ஆர்.பாலு விரிவான கோரிக்கை கடிதம் ஒன்றை இன்று (18.09.2026) எழுதியுள்ளார்.

we-r-hiring

டி.ஆர்.பாலுவின் கடித விவரம்
மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-ன் அடுத்த பகுதியாக மேற்கொள்ளப்படும் சாதிவாரிப்பதிவு தொடர்பாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பாக இக்கடிதத்தை எழுதுகிறேன்.

பிழையான சாதிவாரி கணக்கெடுப்பு முறையைத் திருத்துக: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு திமுக எம்பி டி.ஆர்.பாலு கடிதம்!திராவிட இயக்கமே சமூக நீதியின் முன்னோடி
சமூக நீதியை முன்னெடுத்துச் செல்ல முழுமையான சாதிவாரி கணக்கெடுப்பு அவசியமானது என்ற கருத்தை திராவிட முன்னேற்றக் கழகம் இடையறாமல் பலகாலம் வலியுறுத்தி வந்துள்ளது. சமூகநீதிக் கொள்கையைப் பொறுத்தவரை திமுகதான் முன்னோடி இயக்கம் ஆகும். நீதிக் கட்சியின் வகுப்பு வாரி பிரதிநிதித்துவ முன்னெடுப்புகள் தொடங்கி தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகிய ஒப்பற்ற தலைவர்களின் ஒரு நூற்றாண்டு காலத் தொடர் போராட்டம் இதற்கு சான்றாகும். இதன் பாரம்பரிய உரிமைப் பயனாக விளைந்ததுதான் இன்று தமிழ்நாடு மக்கள் அனுபவித்து வரும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு.

சாதிவாரி கணக்கெடுப்பின் பிழையான வழிமுறை
இந்நிலையில், ஒன்றிய அரசு சாதிவாரி கணக்கெடுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட மக்களை கண்டறிய வகுக்கப்பட்டுள்ள வழிமுறை பொத்தாம் பொதுவானதாக (open ended) உள்ளதும், ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள சாதிப் பட்டியலில் இருந்து தங்கள் சாதியை அடையாளப்படுத்தும் விதமாக இல்லாததும் கவலையளிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பொத்தாம் பொதுவான அணுகுமுறையில் (open ended approach) நடத்தப்பட்ட 2011 சாதிக் கணக்கெடுப்பு அனுபவம் எந்த அளவுக்கு குளறுபடிகளை ஏற்படுத்தும் என்பதை உணர்த்திவிட்டது. உதாரணமாக, 1931 கணக்கெடுப்பு படி 4,147 சாதிகள் மட்டுமே கண்டறியப்பட்ட நிலையில், 2011 கணக்கெடுப்பு 46.70 லட்சம் சாதிகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. மக்கள் தாமாக சாதிவிபரத்தை தெரிவிக்கையில் அனைத்து சாதிகளிலும் உள்ள பிரிவுகள், உட்பிரிவுகள், சாதிப்பெயர்களின் திரிபுகள் மற்றும் வேறுபாடுகள் உருவாகி இதுபோன்ற உண்மைக்கு மாறான, நம்பகத்தன்மை இல்லாத புள்ளிவிவரங்கள் கிடைப்பது சாதிவாரி கணக்கெடுப்பின் நோக்கத்தையே பாழாக்கும் அபாயம் உள்ளது.

பிழையான சாதிவாரி கணக்கெடுப்பு முறையைத் திருத்துக: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு திமுக எம்பி டி.ஆர்.பாலு கடிதம்!

எனவே, இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை, கல்வி மற்றும் பொருளாதார நிலையை மிகச் சரியாக உள்ளது உள்ளபடி கண்டறிவதே சாதிவாரி கணக்கெடுப்பின் நோக்கமாக இருக்க வேண்டும். அதன் அடிப்படையில், அரசுகள் பின் தங்கிய மக்களுக்கான இடஒதுக்கீடு மற்றும் நலத்திட்டங்கள் சார்ந்த கொள்கைகளை வடிவமைத்திட இயலும். எனவே, சாதிவாரி புள்ளிவிவரங்கள் துல்லியமான, முன்மாதிரியான (standardized) பயன்படக்கூடிய வகையில் எடுக்கப்படுவது கட்டாயமானது.

எனவே, தமிழ் நாடு மக்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, மாநில அரசுகளுடனும் கலந்துரையாடி, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கையை மத்திய அரசு சரியான முறையில் குளறுபடிகள் ஏதும் இல்லாமல் தொகுக்க வேண்டும் என எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதை உறுதி செய்ய மத்திய மாநில அரசுகள் வசம் ஏற்கனவே உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் சாதிப் பட்டியலின் துணையுடன் மக்கள் தம் சாதிகளைத் தெரிவிக்கும் முறை மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கு முரணான பொத்தாம் பொதுவான படிவத்தை கைவிட வேண்டும்.பிழையான சாதிவாரி கணக்கெடுப்பு முறையைத் திருத்துக: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு திமுக எம்பி டி.ஆர்.பாலு கடிதம்!

எனவே, இந்த பிரச்சினையில் எங்கள் தலைவரின் அக்கறைகளையும் ஆலோசனைகளையும் ஏற்று 2027 கணக்கெடுப்பு முறையில் உரிய திருத்தங்களை ஒன்றிய அரசு மேற்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பாக நான் வேண்டிக் கொள்கிறேன். ஏற்கனவே மத்திய மாநில அரசுகள் வசம் உள்ள சாதிப் பட்டியலின் அடிப்படையில் எடுக்கப்படும் சாதிவாரி கணக்கெடுப்பு மட்டுமே குற்றம் குறைகள் இல்லாத புள்ளிவிவரங்களை தொகுக்கவும் பின் தங்கிய, வரலாற்று ரீதியாக ஒதுக்கி ஓரங்கட்டப்பட்ட மக்களுக்கான உரிய சமூக நீதியை உறுதி செய்ய உதவும்.

இவ்வாறு, உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களுக்கு எழுதிய தனது கடிதத்தில் டி.ஆர்.பாலு கோரிக்கை விடுத்துள்ளார்.

பாஜக மாநில பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து கருப்பு முருகானந்தம் நீக்கம்: கட்சித் தலைமை அதிரடி நடவடிக்கை!

MUST READ