Homeசெய்திகள்தமிழ்நாடுசொத்து வரி விதிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம்... சேலம் மாநகராட்சி பில் கலெக்டர் கைது

சொத்து வரி விதிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம்… சேலம் மாநகராட்சி பில் கலெக்டர் கைது

-

- Advertisement -

சேலத்தில் புதிய வீட்டிற்கு சொத்துவரி விதிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி வரி வசூலிப்பாளர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

சேலம் மாநகராட்சி 5வது கோட்டம் மிட்டாப்புதூர், ஆண்டிச்சி நகரை சேர்ந்தவர் சண்முகன் என்பவரது மகன் சாஜு(33). இவர் அதே பகுதியில் புதிதாக மாடி வீடு ஒன்று கட்டியுள்ளார். இந்த வீட்டிற்கு சொத்து வரி செலுத்துவதற்காக அந்த பகுதியின் மாநகராட்சி வரி வசூலிப்பாளர் ராஜா-வை அணுகியுள்ளார். அப்போது, சொத்து வரியை குறைத்து மதிப்பிடுவதற்காக பில் கலெக்டர் ராஜா 35 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது.

சாஜூ நடத்திய பேச்சுவார்த்தையில் 30 ஆயிரம் கொடுத்தால் சொத்து வரியை குறைத்து மதிப்பிட்டு தருவதாக ராஜா தெரிவித்துள்ளார். இதனிடையே லஞ்சம் தர விரும்பாத சாஜூ, இது குறித்து சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய 30 ஆயிரம் ரூபாய் பணத்தை சாஜு, பில் கலெக்டர் ராஜாவிடம் வழங்கியுள்ளார்.

அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ராஜாவை கையும் களவுமாக கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ரூ.30 ஆயிரம் லஞ்சப் பணத்தையும் மீட்டனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் ராஜாவை நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைக்க திட்டமிட்டு உள்ளனர்.

MUST READ