Homeசெய்திகள்தமிழ்நாடுகும்பகோணத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை ஆதரித்து செல்வப்பெருந்தகை தேர்தல் பிரச்சாரம்!

கும்பகோணத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை ஆதரித்து செல்வப்பெருந்தகை தேர்தல் பிரச்சாரம்!

-

 

நாடாளுமன்ற தேர்தலையொட்டி கும்பகோணத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரையில், திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இஎந்நிலையில் நேற்று (10.04.2024) கும்பகோணத்தில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., அவர்கள் கலந்து கொண்டு இந்தியா கூட்டணி கட்சியின் இந்திய தேசிய காங்கிரஸின் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர் ஆர்.சுதா அவர்களுக்கு பரப்புரையாற்றி கை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்கள்.

பரப்புரையின் போது தஞ்சாவூர் வடக்கு காங்கிரஸ் தலைவர் திரு.டி.ஆர்.லோகநாதன் அவர்கள், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.ராஜ்குமார் அவர்கள், மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், கூட்டணி கட்சியின் முக்கிய நிர்வாகிகள், கூட்டணி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

MUST READ