spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசெங்கல்பட்டு அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து - இரண்டு மணி நேரம் போக்குவரத்து நெரிசல்!

செங்கல்பட்டு அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து – இரண்டு மணி நேரம் போக்குவரத்து நெரிசல்!

-

- Advertisement -

செங்கல்பட்டு மாவட்டம் சுங்கச்சாவடி அருகே அரசு பேருந்து உட்பட ஐந்து வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

we-r-hiring

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி அருகே திருவண்ணாமலையில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தானது எதிரே சென்ற கார் ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதும் அரசு பேருந்தானது அந்த கார் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் முன்னாள் சென்ற காரானது அடுத்தடுத்து கார்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தால் அரசு பேருந்து உட்பட ஐந்து வாகனங்கள் மோதியதில் பின்னால் வந்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தினார்கள். இந்த நிகழ்வால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியினர்.

MUST READ