Homeசெய்திகள்தமிழ்நாடுகாங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!!

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!!

-

- Advertisement -

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!!காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு நள்ளிரவில் திடீரென  உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக டெல்லி கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தியை சந்தித்தனர்.  மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், பயப்படும் அளவிற்கு அவரது உடல்நலத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறியுள்ளனா்.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது; பருவநிலை மாற்றம் காரணமாக சோனியாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. எனினும் அவர் கவலைக்கிடமான நிலையில் இல்லை. அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதனையடுத்து சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது மகனும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி மற்றும் மகள் பிரியங்கா காந்தி வத்ரா ஆகிய இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தனர். தாயாரை சந்தித்து உடல்நலம் விசாரித்த ராகுல் காந்தி, சிறிது நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

சிலிண்டர் வழங்குவதும், வெளியுறவுக் கொள்கையும் மாநில அரசின் கையிலா இருக்கிறது? – முதல்வர் காட்டம்

we-r-hiring

MUST READ