மறைந்த இசையமைப்பாளர் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் உடல் அரசு மரியாதையுடன் நாளை நல்லடக்கம் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கான அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா நன்றி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய்க்கு நன்றி

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீகாந்த் தேவா, “அப்பாவின் உடல் அரசு மரியாதையுடன் நாளை அடக்கம் செய்யப்படுகிறது.
இதற்காக எனது சார்பிலும், எங்கள் குடும்பத்தினர் சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும் முதலமைச்சர் விஜய்க்கு ரொம்ப ரொம்ப நன்றி” என்று தெரிவித்தார்.
அமைச்சர் ராஜ்மோகனுக்கும் நன்றி
மேலும், இந்த விவகாரத்தில் ஆதரவளித்த அமைச்சர் ராஜ்மோகனுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். தேவாவின் மறைவால் குடும்பத்தினர் மிகுந்த துயரத்தில் உள்ள நிலையில், அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறுவது குறித்து ஸ்ரீகாந்த் தேவா நன்றி கூறியுள்ளார்.
நாளை அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு
தமிழ் திரையுலகில் தனித்துவமான இசையால் புகழ்பெற்ற தேவாவின் மறைவு இசை ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் அவரது உடல், பின்னர் சொந்த ஊரான வேலூர் கிராமத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
தொடர்ந்து SIR-ஐ எதிர்த்துப் போராடுவோம்” – கனிமொழி எம்.பி. உறுதி!
