Homeசெய்திகள்தமிழ்நாடுதொடர்ந்து SIR-ஐ எதிர்த்துப் போராடுவோம்” – கனிமொழி எம்.பி. உறுதி!

தொடர்ந்து SIR-ஐ எதிர்த்துப் போராடுவோம்” – கனிமொழி எம்.பி. உறுதி!

-

- Advertisement -

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தமான SIR-க்கு எதிராகத் தொடர்ந்து போராடுவோம் என்று திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.தொடர்ந்து SIR-ஐ எதிர்த்துப் போராடுவோம்” – கனிமொழி எம்.பி. உறுதி!

தாங்கள் ஏற்கெனவே எச்சரித்த விவகாரம் இன்று நாடு முழுவதும் உள்ள மக்களால் உணரக்கூடிய பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

we-r-hiring

நாங்கள் எச்சரித்த பிரச்சினை இன்று நாடு முழுவதும் உள்ளது

SIR நடவடிக்கைக்கு எதிரான தங்களது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய கனிமொழி, “SIR-ஐ எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறோம். நாங்கள் எச்சரித்த விஷயம் இன்று நாடு முழுவதும் இருக்கக்கூடிய எல்லோராலும் உணரக்கூடிய பிரச்சினையாக மாறியிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து எதிர்ப்போம் என உறுதி

மேலும், SIR-க்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்போம் என்றும் கனிமொழி உறுதிபடக் கூறியுள்ளார். வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை தொடர்பாக அரசியல் கட்சிகள் இடையே விவாதங்கள் நீடித்து வரும் நிலையில், அவரது கருத்து வெளியாகியுள்ளது.

SIR நடைமுறைகள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் தொடர்பான விவகாரங்கள் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வரும் சூழலில், இந்த விவகாரம் அரசியல் அரங்கில் தொடர்ந்து கவனம் பெற்று வருகிறது.

இசையமைப்பாளர் தேவா உடலுக்கு அஞ்சலி: கருப்பு உடையில் வந்த அமைச்சர் ராஜ்மோகன்!

MUST READ