மறைந்த பிரபல இசையமைப்பாளர் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் உடலுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் தாயார் ஷோபா நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
நேரில் அஞ்சலி செலுத்திய ஷோபா

தேவாவின் மறைவால் திரையுலகினரும் இசை ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், முதலமைச்சர் விஜயின் தாயார் ஷோபாவும் நேரில் வந்து மலர் அஞ்சலி செலுத்தி தனது இரங்கலைத் தெரிவித்தார்.
இசை உலகில் நீங்கா இடம்பிடித்த தேவா
தமிழ் திரையுலகில் பல வெற்றிப் பாடல்களையும், ரசிகர்களைக் கவர்ந்த கானா பாடல்களையும் வழங்கியவர் தேவா.
தனது தனித்துவமான இசை பாணியால் பல தலைமுறை ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த அவர், தமிழ் இசை உலகில் மறக்க முடியாத பங்களிப்பைச் செய்துள்ளார்.
தேவாவின் மறைவு திரையுலகினர், இசைக் கலைஞர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது இசைப் படைப்புகள் என்றும் ரசிகர்களின் நினைவில் நிலைத்திருக்கும்.
முதல்வர் விஜய்க்கு ரொம்ப ரொம்ப நன்றி – இசையமைப்பாளர் தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா உருக்கம்!
