Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டில் எங்கும் பாதுகாப்பில்லை; த.வெ.க. ஆட்சிக்கு ஸ்டாலின் கடும் விமர்சனம்!

தமிழ்நாட்டில் எங்கும் பாதுகாப்பில்லை; த.வெ.க. ஆட்சிக்கு ஸ்டாலின் கடும் விமர்சனம்!

-

- Advertisement -

தமிழ்நாட்டில் சிறை, பள்ளி, சாலை, நீதிமன்றம் என எங்கும் பாதுகாப்பு இல்லை என்று கூறி, த.வெ.க. ஆட்சியை மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

we-r-hiring

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்தில், “சிறை, பள்ளி, சாலை, நீதிமன்றம் என எங்கும் பாதுகாப்பில்லை! இதைப் பற்றி எல்லாம் முதலமைச்சருக்கு அக்கறை இல்லை. அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் இல்லை. குற்றவாளிகளுக்கு பயமில்லை.

த.வெ.க. ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை!” என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களை முன்வைத்து, முதலமைச்சர் மற்றும் த.வெ.க. அரசை அவர் விமர்சித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

பிரியாணி கடை கேஷியரை கத்தியால் சரமாரியாகத் தாக்கி பணம் கொள்ளை!

MUST READ